`ஆர்வக் கோளாறில் குடித்தேன்; வீடியோ எடுத்துட்டாங்க'- ஹனானின் ஹூக்கா விளக்கம் | The girl praised by Pinarayi Vijayan, smokes hookah

வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (26/11/2018)

கடைசி தொடர்பு:17:25 (26/11/2018)

`ஆர்வக் கோளாறில் குடித்தேன்; வீடியோ எடுத்துட்டாங்க'- ஹனானின் ஹூக்கா விளக்கம்

கேரளாவில், நடுரோட்டில் மீன்கள் விற்று கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த மாணவி ஹனான் குறித்து மாத்ருபூமி நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, அந்த மாணவிக்கு உதவிகள் குவிந்தன. இந்தச் சமயத்தில், ஹனான் குறித்து சமூக வலைதளங்களில் சிலர் அவதூறு பரப்பினர். கேரள முதல்வர் பினராயி விஜயன் தலையிட்டு, பிரச்னைக்கு முற்றுப்புள்ளிவைத்தார். ஹனானை சமூகவலை தளங்களில் தவறாக சித்திரித்த இருவர் கைதுசெய்யப்பட்டனர். கேரள முதல்வர் பினராயி விஜயன், 'ஹனான் தைரியமான பெண், கேரளாவின் மகள் என்று பாராட்டினார். சினிமாவில் நடிக்க ஆர்வம் கொண்டிருந்த ஹனானுக்கு, சினிமா வாய்ப்பும் தேடிவந்தது. கேரள காதி நிறுவனத்துக்கு விளம்பர மாடலாகவும் இருந்துவருகிறார். 

ஹனான்

இந்நிலையில், இரு நாள்களுக்கு முன், ஹனான் ஹூக்கா குடிப்பது போன்ற வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.' முதல்வர் பாராட்டிய பெண் ரூ.1000 மதிப்புள்ள ஹூக்கா குடிக்கும் ஸ்டைலைப் பாருங்கள்!' என்று அந்த வீடியோ இணையத்தில் பரப்பப்பட்டது. இது தொடர்பாக ஹனான் விளக்கமளித்துள்ளார். ''எடப்பள்ளியில் உள்ள மரியாத் ஹோட்டலுக்கு சினிமா விவாதத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே பலரும் ஹூக்கா குடித்துக் கொண்டிருந்தனர். 'ஹூக்கா அரேபியர்கள் குடிப்பார்கள். இதைக் குடித்தால் உற்சாகம் பிறக்கும். எந்தவிதமான நிகோடினும் ஹூக்காவில் இல்லை' என்று ஒருவர் கூறினர். ஆர்வக் கோளாறில் அதை நான் குடித்தேன். அப்போது, பலரும் அதை வீடியோ எடுத்தனர். நான் அதைத் தவறாக நினைக்கவில்லை. தற்போது, அதை சமூக வலைதளங்களில் பரப்பிவருகின்றனர். மீன் விற்ற நான் பெரிய ஹோட்டல்களுக்கு செல்வதையும், நல்ல ஆடைகள் அணிவதையும் இவர்கள் விரும்பவில்லை.  வேண்டுமென்று அவதூறு பரப்புபவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கொச்சி கமிஷனரிடம் புகார் அளிக்கப்போகிறேன்'' என்று கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க