வெளியிடப்பட்ட நேரம்: 11:25 (27/11/2018)

கடைசி தொடர்பு:11:25 (27/11/2018)

புதிய நேரடி வரிச்சட்டத்தை  உருவாக்க பணிக்குழு!

நேரடி வரி

இந்தியாவின், 1961-ம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தை மறு ஆய்வு செய்யவும், நாட்டின் பொருளாதாரத் தேவைகளுக்கு ஏற்ற புதிய நேரடி வரிச் சட்டத்தை உருவாக்கவும், மத்திய அரசு 2017-ம் ஆண்டு நவம்பரில் பணிக்குழு ஒன்றை அமைத்தது. இது தொடர்பான முந்தைய உத்தரவில் சிறிய மாற்றம் செய்து, மத்திய நேரடி வரிகள் வாரிய உறுப்பினர் (சட்ட மசோதா) அகிலேஷ் ரஞ்சன், பணிக்குழுவின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பணிக்குழுவின் மற்ற உறுப்பினர்களில் எந்த மாற்றமும் இல்லை. இந்தப் பணிக்குழு அதன் அறிக்கையை 2019 பிப்ரவரி 28-க்குள் அரசிடம் தாக்கல் செய்யும்.

சர்வதேச நாடுகளில் பின்பற்றப்பட்டு வரும் சிறந்த வரி விதிப்பு முறைகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் ஓர் வரைவு அறிக்கையை அந்தக் குழு தயாரிக்க உள்ளது. இந்தியாவின் பொருளாதாரத் தேவைகள் மற்றும் தனிநபரின் வருமான விவரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சில பரிந்துரைகள் அந்த அறிக்கை மூலம் முன்வைக்கப்படும் என்று தெரிகிறது. இதன் அடிப்படையில் புதிய வருமான வரிச் சட்டங்களை வரையறுப்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனவே, கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் வருமான வரிச் சட்டத்தில் புதிய மாற்றங்கள் வர இருக்கின்றன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க