பொன்னாருடன் வாக்குவாதம்! - எஸ்.பி யாதீஷ் சந்திரா சபரிமலை பணியில் இருந்து விடுவிப்பு | Yathish Chandra's Sabarimala duty ends

வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (27/11/2018)

கடைசி தொடர்பு:12:15 (27/11/2018)

பொன்னாருடன் வாக்குவாதம்! - எஸ்.பி யாதீஷ் சந்திரா சபரிமலை பணியில் இருந்து விடுவிப்பு

பரிமலை பாதுகாப்பு பணியில் இருந்து திருச்சூர் மாவட்ட எஸ்.பி. யாதீஷ் சந்திரா விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக கேரள புலனாய்வுப் பிரிவு ஐ.ஜி. அசோக் யாதவ் நிலக்கல் பணியில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் பொன்னாருடன் யாதீஷ் சந்திரா வாக்குவாதம்

மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சமீபத்தில் சபரிமலைக்குச் சென்றார். நிலக்கல் பகுதியிலிருந்து பம்பைக்குத் தனியார் வாகனங்களை அனுமதிக்கக் கேரள அரசு தடை விதித்திருந்தது. தடை காரணமாக பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அவருடன் வந்தவர்களின் வாகனங்களைப் பம்பைக்கு அனுமதிக்க யாதீஷ் சந்திரா மறுத்தார். இதனால், மத்திய அமைச்சருக்கும் யாதீஷ் சந்திராவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, கேரள போக்குவரத்து கழகத்துக்குச் சொந்தமான பேருந்தில் மத்திய அமைச்சர் பம்பை செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். மத்திய அமைச்சருடன் போலீஸ் அதிகாரி வாக்குவாதத்தில் ஈடுபட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், யாதீஷ் சந்திரா சபரிமலை பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கேரள புலனாய்வுத்துறை ஐ.ஜி. அசோக் யாதவ் நிலக்கல் பகுதி பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

அசோக் யாதவ் தலைமையிலான குழுவினர் நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 14-ம் தேதி வரை மகரவிளக்கு காலம் முழுக்க நிலக்கல்லில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். சபரிமலை, பம்பை பகுதிகளுக்கு தலைமை பாதுகாப்பு அதிகாரியாக ஐ.ஜி. தினேந்திரா காஷ்யப் செயல்படுவார். சந்நிதானம் பகுதி வயநாடு மாவட்ட எஸ்.பி. கருப்பசாமி கட்டுப்பாட்டில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சபரிமலை பாதுகாப்புப் பணியில் இருந்து விலக்கப்பட்டது குறித்து யாதீஷ் சந்திரா கூறுகையில், ``மத்திய அமைச்சரை அவமதித்ததாகச் சொல்லப்படுவது தவறு. புகாரின் அடிப்படையில் விசாரணை ஆணையம் அமைத்தால் பதில் சொல்லத் தயாராக இருக்கிறேன்'' என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க