வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (28/11/2018)

கடைசி தொடர்பு:16:35 (28/11/2018)

அப்போது தீவிரவாதி, இப்போது தியாகி! - நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த அகமது வானி

தீவிரவாதியாக இருந்து மனம் திருந்தியவர் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தார்.

டந்த ஞாயிற்றுக்கிழமை காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் பதன்கன்ட் கிராமத்தில் நடந்த என்கவுன்டரில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் திருப்பி தாக்கியதில் பாதுகாப்புப்படை வீரர் லேன்ஸ் நாயக் நஷீர் அகமது வானி வீர மரணமடைந்தார். நஷீர் அகமது வானியின் உடல் திங்கள்கிழமை அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு, முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. 

உயிர்தியாகம்

இறுதிச் சடங்கில் ஏராளமான ராணுவ வீரர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். அகமது வானியின் உடலை எடுக்கும்போது, அவரின் தந்தை கண்ணீருடன் கதறினார். அந்தச் சமயத்தில் அருகில் இருந்த ராணுவ அதிகாரி, அந்த முதியவரை அணைத்துத் தேற்றினார். தற்போது, இந்தப் புகைப்படத்தை இந்திய ராணுவம் தன் ட்விட்டர் தளத்தில், `நீங்கள் தனியாக இல்லை. உங்களுடன் எப்போதும் நாங்கள் இருக்கிறோம்' என்ற வாசகத்துடன் வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தீவிரவாதியாகன இருந்து உயிர்தியாகம் செய்த வீரர்

38 வயதான நஷீர் அகமது வானி கடந்த 2004-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். இவர், தெற்கு காஷ்மீரில் உள்ள தெஸ்கி அக்முஜ் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். முதலில் தீவிரவாதியாக இருந்த அகமது வானி, `வன்முறையால் உலகுக்கு அமைதி கிடைக்காது' என்று கருதி மனம் திருந்தினார். பின்னர், 2004-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். இருமுறை சேனாமண்டல் விருதைப் பெற்றுள்ளார். ராணுவத்தின் நம்பிக்கைக்குரிய வீரராக விளங்கிய அகமது வானியின் உயிரை அதே தீவிரவாதம் பறித்துக்கொண்டதுதான் சோகம். உயிரிழந்த அகமது வானிக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க