தீபிகா-ரன்வீர் திருமண ஆடைகள் தயாரானது இப்படிதான்! - சப்யாசச்சி முகர்ஜியின் `மேக்கிங்’ வீடியோ!  | Fashion Designer Sabyasachi shared making video of deepveer wedding costumes

வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (28/11/2018)

கடைசி தொடர்பு:18:50 (28/11/2018)

தீபிகா-ரன்வீர் திருமண ஆடைகள் தயாரானது இப்படிதான்! - சப்யாசச்சி முகர்ஜியின் `மேக்கிங்’ வீடியோ! 

தீபிகா-ரன்வீர் திருமண ஆடைகள் தயாரானது இப்படிதான்! - சப்யாசச்சி முகர்ஜியின் `மேக்கிங்’ வீடியோ! 

தீபிகா

பாலிவுட் பிரபலங்கள் தீபிகா படுகோன் - ரன்வீர் சிங்கின் திருமணம் இத்தாலியில் கடந்த 14-15ம் தேதி நடைபெற்றது முதலே, அவர்களின் திருமணம் எந்த முறையில் நடந்தது, அவர்களின் திருமண ஆடைகளின் என்ன ஸ்பெஷல், யாரெல்லாம் கலந்துகொண்டனர் என சமூகவலைதளங்ளும் ஊடகங்களும் பல ஆராய்ச்சிகளை நடத்தினார்கள். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போல் தம்பதி இருவரும் ஒரே நேரத்தில் திருமணப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட பற்றிக்கொண்டது நெருப்பு. இந்த நிலையில், இருவரின் திருமண ஆடைகளையும் வடிவமைத்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் சப்யாசச்சி முகர்ஜி, அதன் ‘மேக்கிங்’ வீடியோக்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தீபிகா அணிந்திருந்த லெஹங்காவும், ரன்வீர் அணிந்திருந்த ஷெர்வானியும் உருவானது பற்றி, `The India Revival Project' என்ற தலைப்பில் அவர் வெளியிட்டிருந்தார்.

சப்யாசச்சி


இதற்கிடையே, தீபிகா படுகோன் தன் திருமண நாளில் அணிந்திருந்த காஞ்சிவரம் பட்டுப்புடவை பற்றி முதலில் குறிப்பிட தவறிய சப்யாசச்சி, பிறகு அதுகுறித்த அறிக்கையையும் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். அதில், ``கொங்கணி முறைப்படி, பெண்ணின் தாயார்தான் அவருக்குத் திருமணப் புடவையை அளிக்கவேண்டும். அதன்படி, நான் தீபிகாவின் தாயார் உஜ்ஜாலா படுகோனிடமிருந்து புடவையைப் பெற்றுக்கொண்டேன். அந்தப் புடவை, பெங்களூருவில் இருக்கும் அங்கடி கேலரியா என்ற இடத்திலிருந்து தயாரிக்கப்பட்டது. அதனால், அவர்களுக்கும் இதில் பங்கு உண்டு!”, என்று தெரிவித்தார். வீடியோவைக் காண இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

தீபிகா

தற்போது, தீபிகா-ரன்வீர் இன்று மும்பையில் நடக்கவிருக்கும் திருமண வரவேற்பு விழாவில் என்ன ஆடை அணிவார்கள் என்று எதிர்பார்த்துகிடக்கிறது இருவரின் ரசிகர்கள் கூட்டமும்!

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

The making of Ranveer Singh's wedding sherwani. @ranveersingh Video Courtesy: Sabyasachi #Sabyasachi #RanveerSingh #GroomsOfSabyasachi #TheIndiaRevivalProject #TheWorldOfSabyasachi @groomsofsabyasachi

A post shared by Sabyasachi Mukherjee (@sabyasachiofficial) on

நீங்க எப்படி பீல் பண்றீங்க