மே 1 ஆம் தேதி முதல் பெட்ரோல் விலை ரூ. 2 குறைகிறது!

புதுடெல்லி: பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விலை குறைப்பு வருகிற மே 1 ஆம் தேதி முதல் அமலாகலாம் என எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சர்வதே சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலை குறைப்பு முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

பெட்ரோல் விலை கடந்த ஏப்ரல் மாத துவக்கத்தில் லிட்டருக்கு 85 காசுகளும், 15 ஆம் தேதி ஒரு ரூபாயும் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!