ஜான் ஆலனை சென்டினல் தீவுக்கு அனுப்பிய கும்பல்! - அதிர்ச்சிப் பின்னணி | American killed by the Sentinelese may be sent by some other

வெளியிடப்பட்ட நேரம்: 12:46 (29/11/2018)

கடைசி தொடர்பு:12:54 (29/11/2018)

ஜான் ஆலனை சென்டினல் தீவுக்கு அனுப்பிய கும்பல்! - அதிர்ச்சிப் பின்னணி

சென்டினல்களால் கொல்லப்பட்ட ஜான் ஆலனுக்குப் பின்னணியில் அமெரிக்கக் கும்பல் இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மெரிக்காவைச் சேர்ந்த மத போதகர் ஜான் ஆலன் அந்தமான் சென்டினல் பழங்குடிகளால் கொல்லப்பட்டது உலகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  `கிறிஸ்துவின் ராஜ்யமாக சென்டினல் தீவை மாற்ற வேண்டும். கிறிஸ்துவைப் பற்றி அறியாத மக்களாக இருக்கிறார்களே...' என்று ஆலன் தன் டைரியில் எழுதி வைத்துள்ளார். 

சென்டினல்

அக்டோபர் 16-ம் தேதி அமெரிக்காவிலிருந்து போர்ட் பிளேர் வந்த ஜான் ஆலன் அங்குள்ள 'லாலாஜி பே வியூ' ஹோட்டலில் அறை எடுத்துத்  தங்கியுள்ளார். அந்தமானில் அலெக்ஸாண்டர் என்ற மத போதகரும் இவருக்கு நண்பர். போர்ட் பிளேரில் அலெக்ஸாண்டருக்குச் சொந்தமான விவசாயப் பண்ணையிலும் சில நாள்கள் ஆலன் தங்கியிருக்கிறார். நவம்பர் 14-ம் தேதி போர்ட் பிளேரைச் சேர்ந்த பூமி என்பவர் உள்ளிட்ட 6 மீனவர்களுடன் சேர்ந்து இரவு 8 மணிக்கு வடக்கு சென்டினல் தீவை நோக்கி படகில் ஆலன் சென்றார். தீவை அடையும்போது இரவு 10.30 மணி. மீன்கள், கால்பந்து ஆகியவற்றை சென்டினல் மக்களுக்குப் பரிசாக ஆலன் கொண்டு சென்றுள்ளார். தண்ணீருக்குள் இறங்கி நடந்தே தீவை அடைந்தார்.  நவம்பர் 15-ம் தேதி காலை 8.30 மணியளவில் தீவில் தனக்கு என்று சிறிய குடிசை அமைத்துக் கொள்கிறார். தொடர்ந்து மீனவர்கள் போர்ட்பிளேர் திரும்பினர்.

காலை சென்டினல்கள் வெளியே வரத் தொடங்குகின்றனர். அவர்களைப் பார்த்ததும் உற்சாகமடைந்த ஆலன் ஒரு கையை மேலே தூக்கி அசைத்துக் காட்டினார். மற்றொரு கை மார்பில் பைபிளை அணைத்துக் கொண்டிருந்தது. சுமார் 5.5 அடி உயரம் இருந்த சென்டினல் ஒருவரை அணுகிய ஆலன் மீன்களைப் பரிசாக அளித்தார். அப்போது, தொலைவில் இருந்த சிறுவன் ஒருவன் எய்த அம்பு ஆலனின் மார்பில் பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக மார்பில் இருந்த பைபிள் அம்பைத் தாங்கிக்கொண்டது. முதல்முறை பைபிளால் உயிர் பிழைத்த ஆலன் சுதாரித்துக்கொள்ளவில்லை. தொடர்ந்து சென்டினலுடன் பழக முயன்றார். 

வெளியுலக மக்களை எளிதில் ஏற்றுக்கொள்ளாத அந்தப் பழங்குடியினர் ஆலனுடன் பழகுவதைத் தவிர்த்தனர். நவம்பர் 16-ம் தேதி முழுவதும் சென்டினல் மக்களுடன் பழக முயன்ற ஆலனின் முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆலனை இறக்கி விட்ட மீனவர்கள் மீண்டும் 17-ம் தேதி நடந்தது குறித்து அறிந்துகொள்ள தீவுக்குத் திரும்பி வந்தனர். கடற்கரையில் ஆலனின் சடலத்தைக் கயிற்றில் கட்டி  இழுத்துக் கொண்டு சென்டினல்கள் வருவதைப் பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ஆலனின் உடலை மீட்க எடுத்த நடவடிக்கை வெற்றி பெறவில்லை. ஆலனின் உடலை மீட்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பதே நல்லது என்று மானுடவியல் ஆய்வாளர் சொல்கின்றனர். 

சென்டினல்களால் கொல்லப்பட்ட ஜான் ஆலன்

சென்டினல் தீவு வெளியாள்கள் செல்லத் தடை விதிக்கப்பட்ட பகுதியாக இருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தத் தடையை மத்திய அரசு நீக்கியது. முறையான அனுமதி பெறாமல் இதுவரை 44 முறை வெளி நபர்கள் இந்தத் தீவை அணுகியிருக்கின்றனர். எனவே, சென்டினல் தீவுப் பகுதிக்குச் செல்ல மீண்டும் தடை விதிக்க மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதற்கிடையே  ஜான் ஆலன் சென்டினல் தீவுக்குச் செல்வதற்கு முன், போர்ட் பிளேர் அருகே தன் நண்பர் அலெக்ஸாண்டர் பண்ணையில் தங்கியிருந்தார். அப்போது, அவரை அமெரிக்காவைச் சேர்ந்த 53 வயது பெண் ஒருவர் சந்தித்துள்ளார். இவர் டென்னசியைச் சேர்ந்தவர். அதேபோல் கொலராடா பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞரும் ஆலனைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்

அந்தமானில் நவம்பர் 5-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை இவர்கள் இருவரும் தங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜான் ஆலனைச் சந்தித்த இந்த இருவரும்தான் அவரை சென்டினல் தீவுக்குச் செல்லவும் கிறிஸ்தவ மதத்தை சென்டினல்கள் மத்தியில் பரப்பவும் தூண்டியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. நவம்பர் 10-ம் தேதி இவர்கள் இருவரும் அந்தமானை விட்டு வெளியேறியுள்ளனர். ஜான் ஆலன் நவம்பர் 11-ம் தேதி சென்டினல் தீவுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார். அவரின் டைரியை ஆய்வு செய்ததில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. இந்தச் சமயத்தில் வங்கக்கடலில் உருவான புயல் காரணமாக தன் திட்டத்தை ஆலன் தள்ளி வைத்துள்ளார். தொடர்ந்து, நவம்பர் 17-ம் தேதி ஜான் ஆலன் அங்கே சென்று சென்டினல்களால் கொல்லப்பட்டார். 

ஜான் ஆலனின் சென்னிடினல் தீவுக்குள் நுழைய முயன்றது இந்தியாவின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கி உள்ளது. சென்டினல் தீவுக்குள் ஆலனை நுழைய வைக்க அமெரிக்காவில் பெரும் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்தத் தகவல்களை அந்தமான் தீவின் தலைமை போலீஸ் அதிகாரி தபேந்திரா பதக் உறுதி செய்துள்ளார். 

Source - Hindustan times

நீங்க எப்படி பீல் பண்றீங்க