``நாளை ஜாமீன் குறித்து தீர்ப்பு; ரெஹானா உறுதியாக இருக்கிறார்!” தோழி ஆர்த்தி | Rehana Fathima's friend aarthi talks about her arrest

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (29/11/2018)

கடைசி தொடர்பு:18:40 (29/11/2018)

``நாளை ஜாமீன் குறித்து தீர்ப்பு; ரெஹானா உறுதியாக இருக்கிறார்!” தோழி ஆர்த்தி

``அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்ல அனுமதி” என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது முதல், பல பெண்கள் சபரிமலைக்குச் செல்ல முயன்றனர். ஆனால், தொடர்ந்து சபரிமலை பக்தர்கள் இதை எதிர்த்து போராட்டங்கள் நடத்திவருகின்றனர்.

``நாளை ஜாமீன் குறித்து தீர்ப்பு; ரெஹானா உறுதியாக இருக்கிறார்!” தோழி ஆர்த்தி

ரெஹனா

டந்த அக்டோபர் 19-ம் தேதி, கேரளாவைச் சேர்ந்த ரெஹானா பாத்திமா, சபரிமலை செல்ல முயன்று பாதி வழியில் திருப்பி அனுப்பப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஃபேஸ்புக் பக்கத்தில், மத நம்பிக்கைகளை அவமதிக்கும் விதமாகக் கருத்து பதிந்ததால், கடந்த செவ்வாய்க்கிழமையன்று கைது செய்யப்பட்டார் ரெஹானா பாத்திமா.

``அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்ல அனுமதி” என்று கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது முதல், பல பெண்கள் சபரிமலைக்குச் செல்ல முயன்று வருகிறார்கள். இதற்கு ஆண் பக்தர்கள் தொடர்ந்து பலத்த எதிர்ப்புகளைக் காட்டி வருகிறார்கள். ரெஹனா

இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணா மேனன் என்பவர், காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ரெஹானா அவருடைய முகநூல் பக்கத்தில் மத நம்பிக்கைகளை அவமதிக்கும் விதத்தில் கருத்து பதிவிட்டதால் அவரை கைது செய்ய வேண்டும் என்று பத்தனம்திட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனே, ரெஹானா நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுத்தாக்கல் செய்ய, அது தள்ளுபடி செய்யப்பட்டது. 

இதுதொடர்பாக ரெஹானாவின் தோழி ஆர்த்தியிடம் பேசினேன். “நேற்று சிறையில் இருக்கும் ரெஹானாவை அவர் கணவர் மனோஜ் சந்தித்துப் பேசினார். பல ஊடகங்கள் ரெஹானா மிகவும் உடைந்துப் போயிருப்பதாகவும் அழுதுகொண்டிருப்பதாகவும் எழுதிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், அது எல்லாம் உண்மையில்லை. அவர் தன்னம்பிக்கையுடனும் உறுதியுடனும்தான் இருக்கிறார். நீதிமன்றத்தில் தற்போது ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது எங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு கிடைக்கவில்லை எனில், நாங்கள் உயர் நீதிமன்றத்தை அணுகுவோம்!" என்று தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க