``நிலையான வளர்ச்சி பற்றி உலகத் தலைவர்களுடன் விவாதிக்கத் திட்டம்” - பிரதமர் மோடி #G20Summit | like to discuss about growth with leaders in g-20 summit

வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (30/11/2018)

கடைசி தொடர்பு:07:10 (30/11/2018)

``நிலையான வளர்ச்சி பற்றி உலகத் தலைவர்களுடன் விவாதிக்கத் திட்டம்” - பிரதமர் மோடி #G20Summit

ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அர்ஜென்டினா சென்றுள்ளார். எதிர்காலத்தில் உலக நாடுகள் சந்திக்கவுள்ள சவால்களைக் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து விவாதிக்கவுள்ளதாகக் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி


``எதிர்காலத்தில் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில், ஜி-20 மாநாட்டில் பெரிய அளவில் விவாதம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுள்ளேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மோடி

``ஜி-20 நாடுகளின் தலைவர்களைச் சந்திக்க ஆர்வமாகவுள்ளேன். இந்தப் பத்து ஆண்டுகளில் ஜி-20 மாநாட்டின் செயல்பாடுகளை ஆய்வு செய்யவும் அடுத்த பத்தாண்டுகளில் ஏற்படப்போகும் வளர்ச்சியைப் பற்றியும் அதனால் உண்டாகும் பிரச்னைகளைச் சந்திப்பது குறித்தும் விவாதிக்கவுள்ளேன்” என்றும் கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக தன்னை வரவேற்ற இந்தியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ``ஆயிரம் கிலோமீட்டர்கள் கடந்து வந்தாலும் உணர்வால் நம் ஒன்றுபட்டுள்ளோம். என்னை வரவேற்று இந்த நாளை மறக்க முடியாமல் செய்த அர்ஜென்டினாவில் வாழும் இந்தியர்கள் அனைவருக்கும்  மிகவும் நன்றி” என்று தன்னுடைய மற்றொரு ட்வீட்டில் கூறியுள்ளார்.

அர்ஜென்டீனா


இந்தப் பயணத்தின் முதல் நாளில் பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மானைச் சந்தித்து சவுதி அரசு பொருளாதார அடிப்படையிலும் பாதுகாப்பு விஷயத்திலும் இந்தியாவுக்குக் கொடுத்து வரும் ஆதரவை நீட்டிக்கும் விதமாக நட்பு அடிப்படையில் சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்பின் அமெரிக்கப் பொதுச் செயலாளர் அன்டொனியோ குடெர்ரேஸைச் சந்தித்து மாறிவரும் பருவநிலை மாற்றத்தினால் எதிர்காலத்தில் உண்டாகப் போகும் பிரச்னைகளைச் சமாளிப்பது குறித்து விவாதிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு மாதங்களில் அமெரிக்கப் பொதுச்செயலாளருடன் பிரதமர் மோடிக்கு இது இரண்டாவது சந்திப்பு ஆகும்.

இரண்டாவது நாளில் ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளுடனான முத்தரப்பு சந்திப்பில் கலந்துகொள்ளவார். இந்த மூன்று நாடுகளும் சந்தித்துக்கொள்வது இது முதல்முறையாகும். அதன்பின் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப்பின் நடைபெறவுள்ள சீனா, ரஷ்யாவுடனான முத்தரப்பு நாடுகள் சந்திப்பிலும் இந்தியா கலந்துகொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மோடி சீன ஜனாதிபதி சீ சின்பிங், ஜெர்மன் தலைவர் அங்கெலா டொரோதெயா மேர்கெல் பெயின் ஜமைக்கா, நெதர்லாந்து தலைவர்கள் ஐரோப்பிய யூனியன் தலைவர்களுடன் சேர்த்து அர்ஜென்டினா ஜனாதிபதி மௌரிசியோ மாச்ரி, சிலி ஜனாதிபதி செபாஸ்டின் பினேரா  போன்றோரையும் சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த மாநாட்டில் எரிபொருள் எண்ணெய் விலை உயர்வு, தீவிரவாதம் மற்றும் பண மோசடிப் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.