`கேரள வெள்ள மீட்புப் பணிக்கு ரூ.33 கோடி பில்!’ -  விமானப்படை சொல்லும் கணக்கு | indian air force seeks 33 cr from Kerala for flood rescue operations

வெளியிடப்பட்ட நேரம்: 08:31 (30/11/2018)

கடைசி தொடர்பு:09:24 (30/11/2018)

`கேரள வெள்ள மீட்புப் பணிக்கு ரூ.33 கோடி பில்!’ -  விமானப்படை சொல்லும் கணக்கு

கேரளாவில் மழை, வெள்ளப் பாதிப்பின்போது நிவாரணப் பணியில் ஈடுபட்டதற்காக ரூ.25 கோடி வேண்டுமெனக் கேரள அரசிடம் கேட்டுள்ளது இந்திய விமானப்படை.

இந்திய விமானப்படை

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட ஒகி புயலால் கேரளாவின் கடலோரப் பகுதிகள் மனித இழப்புகளையும், கடும் பொருளாதார இழப்புகளையும் சந்தித்தது. இந்தப் பாதிப்புகளிலிருந்து அம்மாநிலம் மீள்வதற்குள் பெருமழை ஏற்பட்டுவிட்டது. ஒகி புயலின் போதுகூட கடலோரப் பகுதிகளில் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், சுமார் 10 நாள்களுக்கு மேல் பெய்த பெருமழையால் கேரளாவின் மூலைமுடுக்கெல்லாம் பாதிப்பு ஏற்பட்டது. நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்குக் கொட்டி தீர்த்த கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் 488 பேர் தங்கள் உயிர்களை இழந்தனர்.

தற்போதுதான் வெள்ள பாதிப்பிலிருந்து மெள்ள மெள்ள மீண்டுவர ஆரம்பித்துள்ளது. இதற்கிடையே, கேரள சட்டசபையில் நடந்த விவாதத்தின்போது, நிவாரண நிதி குறித்தும், செலவுகள் குறித்தும் முதல்வர் பினராயி விஜயன் பேசினார். அப்போது, மழைக்காலத்தில் மத்திய அரசு வழங்கிய உணவு தானியம் மற்றும் விமானம் பயன்படுத்தியதற்காக 290.74 கோடி ரூபாய் நாம் வழங்க வேண்டியுள்ளது எனக் கூறினார். மக்களை மீட்க விமானத்தைப் பயன்படுத்தியதற்காக கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கூறியவர் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் எனக் கூறவில்லை. 

இந்திய விமானப்படை

தற்போது விமானத்துக்கான கட்டணம் குறித்த தகவல் வெளிவந்துள்ளன. மீட்புப் பணியில் ஈடுபட்டதற்காக ரூ.25 கோடி முதல் ரூ.33 கோடி வரை கேரள அரசு இந்திய விமானப் படைக்கு செலுத்த வேண்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பில்லை கேரள அரசிடம் இந்திய விமானப்படை தாக்கல் செய்துள்ளது. இது வழக்கமான நடைமுறை என்று கூறப்பட்டாலும், மறுசீரமைப்பு பணிகளுக்காக நிதி இல்லாமல் கேரள அரசு திண்டாடிவருகிறது.

இந்தவேளையில், இந்திய விமானப் படை கட்டணம் கேட்பது ஏற்க முடியாது எனக் கேரள மக்கள் குமுறி வருகின்றனர். இது சர்ச்சை ஆகி வருகிறது. ஓகி புயலின்போது போதுமான அளவுக்கு விமானங்கள் அனுப்பாதது, ஓ.பி.எஸ் தம்பியை ராணுவ ஹெலிகாப்டரில் அனுப்பியது, தற்போது மக்களை மீட்டதற்காகக் கட்டணம் கேட்பது எனத் தொடர் சர்ச்சைகளில் இந்திய விமானப்படை சிக்கி வருகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க