`வாடிக்கையாளர்களைக் கட்டாயப்படுத்தக்கூடாது' - மினிமம் ரீசார்ஜுக்கு செக் வைக்கும் டிராய்! | TRAI warns airtel and vodafone for minimum recharge

வெளியிடப்பட்ட நேரம்: 09:45 (30/11/2018)

கடைசி தொடர்பு:10:08 (30/11/2018)

`வாடிக்கையாளர்களைக் கட்டாயப்படுத்தக்கூடாது' - மினிமம் ரீசார்ஜுக்கு செக் வைக்கும் டிராய்!

வாடிக்கையாளர்களை மினிமம் ரீசார்ஜ் செய்ய கட்டாயப்படுத்தக்கூடாது எனத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் அறிவுறுத்தியுள்ளது. 

டிராய்

ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் மினிமம் ரீசார்ஜாக ரூ.35 ரீசார்ஜ் செய்ய வேண்டும். இல்லையெனில் இன்கமிங் சேவை நிறுத்தப்படும் எனத் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிவித்தன. சமீபகாலமாக ஏற்பட்டு வரும் நஷ்டத்தைச் சமாளிக்க ஏதுவாக இத்திட்டத்தை நிறுவனங்கள் அறிமுகப்படுத்தின. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டங்களுக்கு இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்குப் புகார்கள் குவிய ஆரம்பித்தன. 

இது குறித்து விசாரணை நடத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் கொண்டுவந்துள்ள மினிமம் ரீசார்ஜ் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசியுள்ள டிராய் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மா, ``நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டங்களில் டிராய் தலையிடுவது கிடையாது. அதேநேரம் மினிமம் ரீசார்ஜ் எனக் கூறி வாடிக்கையாளர்களின் சேவை தடை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மினிமம் ரீசார்ஜ் செய்யவில்லை என்பதற்காக வாடிக்கையாளர்களின் சேவைகளை நிறுவனங்கள் தடை செய்யக்கூடாது. சேவை நிறுத்தம் தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு மூன்று நாள்களுக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார். இது ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்களுக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close