டெல்லி விவசாயப் பேரணியில் ஒன்று கூடிய எதிர்க்கட்சித் தலைவர்கள் - மத்திய அரசுக்கு நெருக்கடி | Delhi farmers protest

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (01/12/2018)

கடைசி தொடர்பு:07:46 (01/12/2018)

டெல்லி விவசாயப் பேரணியில் ஒன்று கூடிய எதிர்க்கட்சித் தலைவர்கள் - மத்திய அரசுக்கு நெருக்கடி

டெல்லியில் கடந்த 2 நாட்களாக (நவ.29- நவ.30) நடைபெற்ற கிசான் முக்தி மார்ச் எனப்படும் விவசாயிகளின் பேரணி நேற்று நிறைவடைந்தது.  All India Kisan Sangharsh Coordination Committee (AIKSCC) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு நேற்று மாலை அரசியல் தலைவர்களின் உரையோடு நிறைவடைந்தது 

விவசாயிகள்

2018 மார்ச் மாதம் 6 முதல் 12 வரை மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற விவசாயிகளுடைய பேரணியின் வெற்றி தேசிய கவனத்தை ஈர்த்தது . இதையடுத்து,  நாடு முழுவதுமிருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு தங்களுடைய இருப்பைப் பதிவு செய்தனர்.

பேரணியின் இரண்டாம் நாளான நேற்று மாலைப் பொதுக்கூட்டத்தில் மூத்த அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர். காஷ்மீரின் பரூக் அப்துல்லா, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, மாநிலங்களவை உறுப்பினர்  டி.ராஜா ஆகியோர் பங்குகொண்டனர்.  டெல்லி மாநில முதலமைச்சரான அரவிந்த் கெஜ்ரிவால் விழாவின் இறுதி உரை நிகழ்த்தினார். அவருக்கு முன்னதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆளும் பா.ஜ.க அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். 

போராட்டத்தின் நிறைவில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஒன்றாக கைகோத்துள்ளனர். இந்நிகழ்வு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2019 நடக்க உள்ள சூழ்நிலையில் இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய விவசாயிகளின் இப்போராட்டம் ஆளும் பா.ஜ.க-வுக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close