`முதலில் அவர்களை அனுப்பி வையுங்கள்' - பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவிய ஆளுநர்! | 'Fly Her First': Arunachal Pradesh Governor's Gesture For Pregnant Woman

வெளியிடப்பட்ட நேரம்: 08:49 (01/12/2018)

கடைசி தொடர்பு:09:03 (01/12/2018)

`முதலில் அவர்களை அனுப்பி வையுங்கள்' - பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவிய ஆளுநர்!

பிரசவ வலியால் துடித்த பெண்ணை தான் வந்த ஹெலிகாப்டரிலேயே அழைத்துச் சென்று உதவி பாராட்டுகளைப் பெற்றுள்ளார் அருணாசல பிரதேச ஆளுநர்.

ஆளுநர் பி.டி.மிஸ்ரா

அருணாசலப் பிரதேச ஆளுநராக முன்னாள் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி பி.டி.மிஸ்ரா இருந்து வருகிறார். இவர் நேற்று தவாங் நகரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஹெலிகாப்டரில் வந்திருந்தார். அப்போது விழாவில் பங்கேற்ற ஒரு பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இந்த விஷயம் ஆளுநர் பி.டி.மிஸ்ராவுக்கு அங்கிருந்து எம்.எல்.ஏ மூலம் கொண்டு செல்லப்பட்டது. அப்பெண்ணை இடாநகர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என ஆளுநருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்தவுடன் உடனடியாக தான் வந்திருந்த ஹெலிகாப்டரில் அப்பெண்ணையும், அவரின் கணவரையும் உடன் அழைத்துச் சென்றார் ஆளுநர். 

இடாநகருக்கு செல்வதற்காகச் சென்றபோது ஹெலிகாப்டருக்கு எரிபொருள் நிரப்புவதற்காக தேஜ்பூரில் தரையிறக்கப்பட்டது. ஆனால், அப்போது திடீரென தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் இயங்காமல் போனது. அதேநேரம், அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி அதிகமானது. உடனடியாக விமானப்படையைத் தொடர்புகொண்ட ஆளுநர் விமானப்படை ஹெலிகாப்டரை தேஜ்பூருக்கு வரவழைத்த ஆளுநர் கர்ப்பிணிப் பெண்ணை இடா நகருக்கு அனுப்பி வைத்தார். அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அப்பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. தக்க சமயத்தில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவிய ஆளுநருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close