ஜப்பான் - அமெரிக்கா - இந்தியா கூட்டணிக்கு பிரதமர் மோடி வைத்த புதிய பெயர்! | Japan-America-India Meet, PM Modi Calls Partnership "JAI''

வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (01/12/2018)

கடைசி தொடர்பு:11:50 (01/12/2018)

ஜப்பான் - அமெரிக்கா - இந்தியா கூட்டணிக்கு பிரதமர் மோடி வைத்த புதிய பெயர்!

ஜப்பான் - அமெரிக்கா - இந்தியா கூட்டணிக்கு `ஜெய்' எனப் பெயரிட்டுள்ளார் பிரதமர் மோடி. 

பிரதமர் மோடி

ஜி-20 மாநாடு அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அய்ரஸில் நடைபெற்றுவருகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், கனடா, இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற பொருளாதாரத்தில் வல்லரசுகளாக உள்ள 19 நாடுகளின் தலைவர்களும், ஐரோப்பிய யூனியன் தலைவர்களும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தின்போது ஜப்பான் அதிபர் ஜின்ஜோ அபே மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒன்றாகச் சந்தித்துப் பேசினார். கூட்டத்துக்குப் பிறகு மூன்று தலைவர்களும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, ``ஜப்பான் - அமெரிக்கா - இந்தியா ஆகிய மூன்று நாடுகளின் முதல் எழுத்துகளைச் சேர்த்து ஜெய் (JAI) என்ற பெயரில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. ஜெய் என்றால் இந்தியில் வெற்றி என்று பெயர். அதற்கு ஏற்ப இந்தக் கூட்டணி வெற்றிக்கூட்டணி ஆகும். இருநாடுகளும் இந்தியாவின் நட்பு நாடுகள். அதேபோல் இந்த இரு தலைவர்களும் நல்ல நண்பர்கள்" என்று தெரிவித்தார். அதேபோல் ஜெய் என்பதற்கு என்ன அர்த்தம் என்பதையும் இருவருக்கும் பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.

முன்னதாக சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் மோடி ஆலோசனை நடத்தினார். ஜி-20 மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ``உலக நாடுகளின் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது தீவிரவாதம். தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் சிலர் அவர்களுக்கு நிதியுதவி செய்து உலக நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றனர்" எனக் குற்றம்சாட்டினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close