கேரளா உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி! | Kerala local body bypolls: BJP goes third spot

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (01/12/2018)

கடைசி தொடர்பு:13:30 (01/12/2018)

கேரளா உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி!

கேரளா உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 2 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 

கேரளா உள்ளாட்சித் தேர்தல்

கேரளாவில் 14 மாவட்டங்களில் 39 வார்டுகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கூட்டணி 19 வார்டுகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணி 12 இடங்களைக் கைப்பற்றியது. எஸ்.டி.பி.ஐ மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் தலா இரு வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன. 

சபரிமலை விவகாரத்தை முன் வைத்து அந்தக் கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தன. ஆனால், பத்தனம் திட்டா மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் பாரதிய ஜனதாவுக்குப் பலத்த அடியே கிடைத்துள்ளது. இந்த மாவட்டத்தில் இரு வார்டுகளில் தேர்தல் நடைபெற்றது. அதில், எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த ஒருவரும் சுயேச்சை வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றுள்ளனர். பாரதிய ஜனதா கட்சி ஆலப்புழா மாவட்டத்தில் மட்டுமே இரு வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. 

அதேவேளையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை கூறுகையில், ``சபரிமலை போராட்டம் காரணமாகப் பாரதிய ஜனதா கட்சிக்கு இடுக்கி, பத்தனம் திட்டா, ஆலப்புலா மாவட்டங்களில் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன என்று தெரிவித்துள்ளார். சபரிமலைக்குப் பெண்கள் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த பிறகு கேரளாவில் நடந்த முதல் தேர்தல் இது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close