மூன்று நிமிடத்துக்கு ஒரு டீன்ஏஜ் பெண்! அச்சுறுத்தும் ஹெச்.ஐ.வி! #WorldAidsDay | Every three minutes a teenage girl is infected by HIV

வெளியிடப்பட்ட நேரம்: 15:17 (01/12/2018)

கடைசி தொடர்பு:15:17 (01/12/2018)

மூன்று நிமிடத்துக்கு ஒரு டீன்ஏஜ் பெண்! அச்சுறுத்தும் ஹெச்.ஐ.வி! #WorldAidsDay

லகளவில் 15 முதல் 19 வயதுள்ளவர்களில் ஒரு மணி நேரத்துக்கு 30 பேர் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்படுவதாகவும், ஒவ்வொரு மூன்று நிமிடத்துக்கும் ஒரு டீன் ஏஜ் பெண் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்படுவதாகவும் யுனிசெஃப் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள். 

ஹெச்.ஐ.வி

உலகம் முழுவதும் 1988-ம் ஆண்டிலிருந்து உலக சுகாதார நிறுவனம், டிசம்பர் 1-ம் தேதியை ‘உலக எய்ட்ஸ் தினமாக அனுசரித்து வருகிறது. 2018-ம் ஆண்டின் உலக எய்ட்ஸ் தினத்தின் தீம், “உங்கள் நிலை பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்” (Know your Status). அதாவது, ஒருவரின் HIV நிலை பற்றித் தெரிந்துகொள்வது, அந்நோய்க்கு எதிராக போராடுவதில் மிக முக்கியமானது என்பதை அழுத்தமாக முன்வைக்கிறது.2017-18-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மட்டும் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,106,706 பேர். அதில் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் 80,000 பேர். உலகளவில் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமுள்ள நாடுகளில் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது. 

HIV

2017-ம் ஆண்டில் இந்தியாவில் 19 வயதுக்குட்பட்டவர்களில் 1,20,000 குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெஃப் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. தெற்காசிய நாடுகளில் இந்தியாவில் தான் அதிகபட்சமான இளம் பருவத்தினர் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹெச்.ஐ.வி பரவுவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் 2030ம் ஆண்டுக்குள் உலகளவில் ஒவ்வொரு நாளும் எய்ட்ஸ் நோயால் இறக்கும் இளம் பருவத்தினரின் எண்ணிக்கையானது  80-யைத் தாண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

ஹெச் ஐ வி

குழந்தைகள், இளம் பருவத்தினர், கர்ப்பிணிப் பெண்கள், தாய்மார்கள் ஆகியோரிடையே ஹெச்.ஐ.வி ஆபத்தைக் குறைப்பதில் தெற்காசிய நாடுகள் சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டில் 19 வயதுக்குட்டபட்டவர்களில் இந்தியாவில்  1,20,000 பேரும், பாகிஸ்தானில் 5,800 பேரும், நேபாளத்தில் 1,600 பேரும் ஹெச்.ஐ.வி.யுடன் வாழ்ந்து வருகின்றனர். 

HIV

தற்போது உலகளவில் 19 வயதுக்குட்பட்டவர்களில் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வருடமும் புதியதாக 4,30,000 பேர் பாதிக்கப்படுகின்றனர். கடந்த ஆண்டு ஹெச்.ஐ.வி.யால் இறந்தவர்களில் 19 வயதுக்குட்டபட்டவர்கள் மட்டும் 1,30,000 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க