வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (02/12/2018)

கடைசி தொடர்பு:06:30 (02/12/2018)

'இனி RAC டிக்கெட்களுக்கு எளிதாக பெர்த் கிடைக்கும்' -ரயில்வேயின் புது திட்டம் 

பொதுவாக ரயில்களில் முன்பதிவு செய்யும்போது 'Waiting list' டிக்கெட்களைப் பலரும் எடுப்பர். இதற்கு முக்கிய காரணம் எப்படியும் யாரேனும் தங்களது டிக்கெட்டை ரத்து செய்தால் நமக்கு பெர்த் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்ற நம்பிக்கைதான். சிலருக்கு பெர்த்தும் கிடைக்கும், சிலருக்கு அவை RAC டிக்கெட்களாக மாறும். 'Reservation Against Cancellation' எனப்படும் இந்த டிக்கெட்களுக்குப் பாதி பெர்த்  கொடுக்கப்படும் என்பதை அனைவரும் அறிவர். பயணம் செய்ய வேண்டிய யாரேனும் வரவில்லை என்றால்தான் அவர்களுக்குப் பெர்த் கிடைக்கும். அதுவரை உட்கார்ந்தே தான் பயணிக்கவேண்டும். இப்போது ரயில்வே கொண்டு வரப்போகும் இந்த புதிய திட்டத்தின் மூலம் இதில் சில முன்னேற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில்வே

அது என்ன மாற்றம் என்றால், முன்பு போல அல்லாமல் சார்ட் தயாரான பின் தங்கள் டிக்கெட்களை ரத்து செய்யும் பயணிகளின் தகவல்களும் இனி உடனுக்குடன் ரயிலில் உள்ள TTE-க்கு வந்துசேருமாம். இதற்காக அவர்களுக்கு மொபைல் அளவிலான ஒரு சிறப்பு சாதனம் கொடுக்கப்படும் எனத் தெரியவந்துள்ளது. இவை நேராக ரயில்வே சர்வரிடம் கனெக்ட் ஆகிவிடும். இதன்மூலம்  TTE-க்கு தாமதாக ரத்தாகும் பெர்த்க்களை பற்றி உடனுக்குடன் தெரியவரும். எனவே உடனடியாக அவரால் RAC டிக்கெட்களுக்கு அந்த பெர்த்தை அளிக்கமுடியும். இதற்கு முன்புவரை பயணி ஏறவேண்டிய ரயில்நிலையத்திலிருந்து 2 ரயில் நிலையங்கள் வரை அவருக்காக TTE பொறுத்திருந்து பார்ப்பார் பின்தான் பெர்த் இன்னொருவருக்குக் கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சதாப்தி மற்றும் ராஜ்தானி ரயில்களில் சோதனை செய்யப்பட்டுவரும் இது விரைவில் அனைத்து ரயில்களுக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அனைத்து TTE-க்கும் உடனடியாக இந்த சாதனங்களை கொடுப்பது அவ்வளவு எளிதல்ல என்பதால் பல கட்டங்களாகப் பிரித்து இவை வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க