‘இந்திய ரயில்வேயில் ஒரு மைல் கல்’- போகிபீல் பாலத்தில் போக்குவரத்து தொடங்கப்பட்டது | First train ran on Bogibeel Bridge

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (02/12/2018)

கடைசி தொடர்பு:16:30 (02/12/2018)

‘இந்திய ரயில்வேயில் ஒரு மைல் கல்’- போகிபீல் பாலத்தில் போக்குவரத்து தொடங்கப்பட்டது

இந்தியாவின் மிக நீண்ட சாலை-ரயில் பாலமான போகிபீல் பாலத்தின் போக்குவரத்து இன்று முதல் தொடங்கப்பட்டது. இது ‘ரயில்வே துறையின் மைல் கல்’ என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

போகிபீல்

அஸ்ஸாமின் டிப்ருகாரில் (Dibrugarh) இருந்து அருணாச்சல பிரதேசத்தின் பசிகாட் வரை ‘போகிபீல்’ என்ற சாலை - ரயில் போக்குவரத்து திட்டம் அமைக்கப்பட்டது. இது ஆசியாவில் இரண்டாவது மிகப் பெரிய பாலம். இதில், மேலே மூன்று வழி சாலையும் கீழே இரண்டு வழி ரயில் தடமும் அமைக்கப்பட்டுள்ளது. போகிபீல் பாலம் சுமார் 4.94 கிமீ தூரம் வரை அமைந்துள்ளது. இந்தப் பாலத்தில் நேற்று முதல் போக்குவரத்து தொடங்கிவைக்கப்பட்டது. இதையடுத்து இன்று அந்தப் பாலத்தில் முதல்முறையாக ரயில் இயக்கப்பட்டது. 

இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், “இன்று ரயில்வே துறையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். மற்றும் ரயில்வேயில் இது ஒரு மைல் கல். இன்று முதல்முறையாக போகிபீல் சாலை-ரயில் பாலம் வழியாக ரயில் இயக்கப்பட்டுள்ளது. இது அஸ்ஸாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தை இணைக்கும் வகையில் சுமார் 4.94 கிமீ தூரம் வரை அமைக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.