`தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவின் உதவியைக் கோரலாம்!’ - பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் அட்வைஸ் | Rajnath singh's advice to pakistan

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (02/12/2018)

கடைசி தொடர்பு:19:00 (02/12/2018)

`தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவின் உதவியைக் கோரலாம்!’ - பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் அட்வைஸ்

தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளைத் தனியாக எடுக்க முடியாவிட்டால் பாகிஸ்தான், இந்தியாவின் உதவியைக் கோரலாம் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். 

ராஜ்நாத் சிங்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், ``ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்திய ஆளுகைக்குட்பட்ட பகுதி என்பதால், அது பிரச்னை இல்லை. அதைப்பற்றி விவாதிக்க வேண்டியதில்லை. பிரச்னை என்பது தீவிரவாதம்தான்; அதைப் பற்றித்தான் பாகிஸ்தான் விவாதிக்க வேண்டும். 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் நான் ஒன்றே ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். ஆப்கானிஸ்தானில், தீவிரவாதம் மற்றும் தாலிபான்களுக்கு எதிராக அமெரிக்கா உதவியுடன் போர் நடைபெறுகிறது என்றால், தீவிரவாதத்துக்கு எதிராகத் தனியாகப் போரிட முடியவில்லை எனில் பாகிஸ்தான் இந்தியாவின் உதவியைக் கோரலாமே?’ என்றார். ஆல்வார் மாவட்டத்தில் பன்சார் பகுதிக்குச் சென்ற பின்னர் அங்கு செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத், ``தேர்தல் நெருங்கும் வேளையில் காங்கிரஸ் தலைவர்கள் கோயில்களில் வழிபாடு செய்கிறார்கள். தேர்தல் இல்லாத நேரங்களில் அவர்கள் கோயில்களில் வழிபாடு நடத்துவதைப் பார்க்க முடியாது. ஆனால், பா.ஜ.கவைப் பொறுத்தவரை அது கலாசாரம்’’ என்றார்.
 


[X] Close

[X] Close