‘கழுதைக்கு இருக்கும் கருணைகூட தந்திரிக்கு இல்லை’ - கேரள அமைச்சர் சர்ச்சைப் பேச்சு | donkeys have more grace than the tantri, said PWD minister Sudhakaran

வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (03/12/2018)

கடைசி தொடர்பு:09:46 (03/12/2018)

‘கழுதைக்கு இருக்கும் கருணைகூட தந்திரிக்கு இல்லை’ - கேரள அமைச்சர் சர்ச்சைப் பேச்சு

‘சபரிமலை கோயிலில் கடுமையாக உழைக்கும் கழுதைகள், தங்கள் வேலை முடிந்தவுடன் போராட்டத்துக்குச் செல்வதில்லை’ என அமைச்சர் பேசியுள்ளது, கேரளாவில் புது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

சபரிமலை

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, கேரளாவில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு கேரளாவில் உள்ள பொதுமக்கள், எதிர்க்கட்சிகள், சில அமைப்புகள் போன்றவை கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. இதற்கிடையில், ஐப்பசி பூஜைக்காகக் கடந்த மாதம் ஐந்து நாள்கள் சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டிருந்தது. அப்போது, சில பெண்கள் கோயிலுக்குள் செல்ல முயன்றதால், நடை திறக்கப்பட்டிருந்த ஐந்து நாள்களும் சபரிமலையில் பதற்றம் நிலவியது. தற்போது, கார்த்திகை மாத பூஜைக்காக சபரிமலை கோயில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. போராட்டங்கள், அசம்பாவிதங்களைத் தடுக்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் கெடுபிடிகள் அதிகமாக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் நேற்று, ஆலப்புழாவில் நடைபெற்ற ஒரு கலாசார விழாவில் பேசிய கேரள பொதுப் பணித்துறை அமைச்சர் சுதாகரன், ‘ சபரிமலை கோயிலில் பல கழுதைகள் கடுமையாக உழைக்கின்றன. அவை தங்கள் வேலை முடிந்ததும் போராட்டத்துக்குச் செல்வதில்லை. மாறாக, பம்பை நதிக்கரையில் அமைதியாக ஓய்வெடுக்கின்றன. அந்தக் கழுதைகளுக்கு இருக்கும் கருணைகூட சபரிமலை கோயில் தந்திரிகளுக்கு இல்லை” எனப் பேசியுள்ளார். 

இவரின் பேச்சு, கேரள அரசியலில் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு கேரள அரசு துணை நிற்பதாக சபரிமலை கோயில் தந்திரிகள் புகார் தெரிவித்துவரும் நிலையில், தற்போது ஆளும் கட்சி அமைச்சர் தந்திரிகளை விமர்சித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


[X] Close

[X] Close