வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (03/12/2018)

கடைசி தொடர்பு:14:20 (03/12/2018)

`என் தலைவரை பப்புன்னு சொல்வதா?'- பா.ஜ.க எம்பியை வறுத்தெடுத்த காங்கிரஸ் பெண் கவுன்சிலர்

ராகுல் காந்தியை பப்பு எனக் கூறியதற்காக பா.ஜ.க எம்பி ஒருவரைக் காங்கிரஸ் பெண் பிரமுகர் வசைபாடிய சம்பவம் நடந்துள்ளது. 

காங்கிரஸ் பெண் பிரமுகர்

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பா.ஜ.கவைச் சேர்ந்தவர்கள் எப்போதும் `பப்பு' எனக் கூறி அழைத்து வருகின்றனர். இதற்குக் காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் நடந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் விவாதத்தின் போதுகூட, ``நீங்கள் என்னை ``பப்பு'' என அழைப்பது எனக்குத் தெரியும். எனக்கு அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை" என நாடாளுமன்றத்திலேயே பா.ஜ.க எம்பிக்களை பார்த்து தெரிவித்தார் ராகுல். இருந்தும் அவரைத் தொடர்ந்து பப்பு என அழைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் பா.ஜ.கவினர். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொள்ள தேவ்ஜி பாய் கலந்துகொள்ள வந்தார். 

அப்போது அந்தப் பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக இருந்ததால் விபத்து ஏற்பட்டதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் சீதா காயமடைந்துள்ளார். சாலைகள் மோசமாக உள்ளது குறித்து பா.ஜ.க எம்பியிடம் முறையிட்டதற்கு உங்கள் பப்புவிடம் சொல்லி சாலைகளைச் சரி செய்யுங்கள் என அவர் கூறியதாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த அந்தப் பெண் கவுன்சிலர், எம்பி கூட்டம் நடத்தும் இடத்துக்கு வந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ``நீங்கள் எப்படி எங்கள் தலைவர் ராகுல் காந்தியை பப்பு என அழைக்கலாம்" எனக் கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரின் எதிர்ப்பைத் தொடர்ந்து எம்பி பெண் கவுன்சிலரிடம் மன்னிப்பு கோரினார். இந்தச் சம்பவத்தால் அந்தக் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க