ஓப்ரா வின்ஃப்ரேவுக்கு இண்டியன் காஸ்டியூம்... அசத்திய டிசைனர் சப்யாசச்சி | Ophra Winfrey dons Sabyasachi's creation in latest 'elle' magazine

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (03/12/2018)

கடைசி தொடர்பு:18:20 (03/12/2018)

ஓப்ரா வின்ஃப்ரேவுக்கு இண்டியன் காஸ்டியூம்... அசத்திய டிசைனர் சப்யாசச்சி

``என் கடை திறப்புப் பணிகளை எல்லாம் முடித்துவிட்டு, காலையில் களைப்புடன் இருந்தபோது 10 மணிக்கு அவர் வந்தார். அவருடைய பெருந்தன்மையை நினைத்து, நான் வாயடைத்துப்போனேன்."

ஓப்ரா வின்ஃப்ரேவுக்கு இண்டியன் காஸ்டியூம்... அசத்திய டிசைனர் சப்யாசச்சி

ஓப்ரா வின்ஃப்ரே

மெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே, பாலிவுட் ஆடை வடிவமைப்பாளர் சப்யாசச்சி முகர்ஜி உருவாக்கிய ஆடை அணிந்து, சர்வதேச இதழ் ஒன்றின் அட்டைப்  படத்தில் இடம்பெற்றிருப்பதுதான், பாலிவுட் பிரபலங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் ‘டாக் ஆஃப் தி டாபிக்’ இருக்கிறது.

இதுகுறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சப்யாசச்சி கூறுகையில், “முதன்முறையாக ஓப்ரா இந்தியா வந்திருந்தபோது, அவர் ஜெய்ப்பூரில் ராயல் விருதில் கலந்துகொள்ளவிருந்தார். அதற்காக, அவருக்குப் புடவை அணிவித்து இந்திய பாணியில் அவரை தயார்ப்படுத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நாங்கள் இருவரும் சிறிது நேரம் உரையாடினோம். இந்தியா, இங்குள்ள ஆன்மிகம், கலை மற்றும் கைவினைப் பொருள்கள் பற்றிப் பேசினோம். மும்பை 'கலா கோடா' பகுதியில் என்னுடைய புதிய கடை அமையவிருப்பது பற்றியும் பேச்சுவாக்கில் அவரிடம் நான் கூறினேன். அவர் வாய்ப்பிருந்தால் வருவதாகச் சொன்னார். அவர் அன்பாகக் கூறுகிறார் என்று நினைத்தேன். என் கடை திறப்புப் பணிகளை எல்லாம் முடித்துவிட்டு, காலையில் களைப்புடன் இருந்தபோது, 10 மணிக்கு அவர் வந்தார். அவருடைய பெருந்தன்மையை நினைத்து, நான் வாயடைத்துப்போனேன். 

சப்யாசச்சி

ஓப்ரா ஓர்  உலக ஆளுமை மட்டுமல்ல; அவர் உண்மையானவரும்கூட. உங்கள் வீட்டுக்கு ஓப்ரா பீட்சா சாப்பிட வருகிறேன் என்றால் அந்த வார்த்தைகளைச் சாதாரணமாக எடுத்துவிடாதீர்கள். நிச்சயம் அவர் அதை நிகழ்த்திக்காட்டுவார்!” என்று நெகிழ்ந்து எழுதியுள்ளார்.

தீபிகா-ரன்வீர் திருமணம், ப்ரியங்கா-நிக் ஜோனஸின் திருமணம் எனப் பரபரப்பாக இயங்கும் பாலிவுட் நட்சத்திரங்களின் ஃபேவரைட் ஆடை வடிவமைப்பாளர் சப்யாசச்சியின் காட்டில் தற்போது அடைமழைதான்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க