2019-லிருந்து இந்த டெபிட் / கிரெடிட் கார்டுகள் செல்லாது! #Alert | This cards wont work after December 2018

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (03/12/2018)

கடைசி தொடர்பு:20:20 (03/12/2018)

2019-லிருந்து இந்த டெபிட் / கிரெடிட் கார்டுகள் செல்லாது! #Alert

உங்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் EMV என்றழைக்கப்படும் சிப் இருக்கிறதா என்று உடனே பாருங்கள். இல்லையென்றால் அந்த கார்டுகளை மாற்றவேண்டிய நேரம் வந்துவிட்டது. 

கார்டு

என்ன அது EMV சிப், அது எங்கே இருக்கும்? என்று கேட்பவர்களுக்கு ஒரு சிறு விளக்கம். Europay, Mastercard, Visa ஆகிய நிறுவனங்களின் ஷார்ட்ஃபார்ம்தான் EMV. பாதுகாப்பான ஏ.டி.எம் பரிவர்த்தனைகளுக்கு அவர்கள் சேர்ந்து உருவாக்கியதுதான் இந்த சிப் கொண்ட கார்டுகள். மொபைல் சிம் கார்டைப் போன்று இருக்கும் இந்த EMV சிப் டெபிட் அல்லது கிரெடிட் கார்டின் முன்புறம் இருக்கும். இந்த சிப்பும் ஏற்கெனவே இருக்கும் PIN வசதியையும் கொண்டிருக்கும் இந்த கார்டுகள்.

கிரெடிட் கார்டு

ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி இதுதவிர்த்து தற்போது இருக்கும் மற்ற அனைத்து டெபிட் மற்றும் கார்டுகளையும் இந்த டிசம்பர் 31-ம் தேதிக்குள் இந்த EMV சிப் பொறித்த கார்டுகளாக மாற்றியாக வேண்டுமாம். வங்கிகள் இதைச் சரிவர செய்துமுடிக்குமாறு உத்தரவிட்டுள்ளது ரிசர்வ் வங்கி. இதற்குக் காரணம் முன்பு இருக்கும் magnetic stripe கார்டுகள் பாதுகாப்பானதுதான் என்றாலும் இதிலும் சில மோசடிகள் நடக்க வாய்ப்புள்ளது. ஆனால், இந்த EMV சிப் கொண்ட கார்டுகள் இதைவிடப் பாதுகாப்பானது, இதில் இருந்து எளிதில் தகவல்களை திருடமுடியாது. ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் இதில் இருக்கும் டேட்டா மாறிக்கொண்டே இருக்கும்.

கார்டு

இந்த மாற்றத்துக்குக் கூடுதல் நேரம் கேட்டு வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் ஏற்கெனவே முறையிட்டனர். ஆனால், ரிசர்வ் வங்கி இதற்குக் காதுகொடுப்பதாகத் தெரியவில்லை. காரணம் இது தொடர்பான அறிவுறுத்தல்களை வங்கிகளுக்கு 2015-ம் ஆண்டு முதலே கொடுத்துவருகிறது ரிசர்வ் வங்கி. எனவே, உங்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் இந்த சிப் இல்லையென்றால் உடனே உங்கள் வங்கியிடம் முறையிட்டு புது கார்டுகளை வாங்குங்கள். அவர்களாக அறிவுறுத்தும்வரை காத்திருக்கவேண்டாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close