ரூ.31,700 கோடிக்கு கைமாறிய ஹார்லிக்ஸ்! | Unilever buys horlicks

வெளியிடப்பட்ட நேரம்: 20:54 (03/12/2018)

கடைசி தொடர்பு:20:54 (03/12/2018)

ரூ.31,700 கோடிக்கு கைமாறிய ஹார்லிக்ஸ்!

ஹார்லிக்ஸ் பிராண்டை வாங்குவதற்காக யூனிலிவர் நிறுவனத்தோடு நெஸ்லே, கொகோகோலா, கிராப்ட்ஹெய்ன்ஸ் ஆகிய நிறுவனங்கள் போட்டியிட்டதில் இறுதி வெற்றி யூனிலிவருக்குக் கிடைத்துள்ளது.

கிளாஸ்கோ ஸ்மித் க்ளைன் நிறுவனத்தின் இந்தியத் தயாரிப்பான ஹார்லிக்ஸ் பிராண்டை ரூ.31,700 கோடி விலைகொடுத்து யூனிலிவர் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.

ஹார்லிக்ஸ்

ஹார்லிக்ஸ் பிராண்டை வாங்குவதற்காக யூனிலிவர் நிறுவனத்தோடு நெஸ்லே, கொகோகோலா, கிராப்ட்ஹெய்ன்ஸ் ஆகிய நிறுவனங்கள் போட்டியிட்டதில் இறுதி வெற்றி யூனிலிவருக்குக் கிடைத்துள்ளது. இதன்மூலம் முதலாம் உலகப்போரின் இறுதியில் இங்கிலாந்து ராணுவ வீரர்களின் தேவைக்காக இந்தியாவுக்குள் வந்த 140 ஆண்டு பழைமைவாய்ந்த ஹார்லிக்ஸ் பிராண்ட், மீண்டும் இங்கிலாந்து நிறுவனத்தின் வசமாகிறது.

ஹிந்துஸ்தான் யூனிலிவர்

இந்தியாவில், ஊட்டச்சத்துப் பொருள்களின் விற்பனைச்சந்தையில் ஹார்லிக்ஸ்தான் முதலிடம் வகிக்கிறது. ஜி.எஸ்.கே. இந்தியா நிறுவனம் கடந்த 2018 நிதியாண்டில் மட்டும் இந்தியச் சந்தையில் அதன் முக்கிய ஊட்டச்சத்துத் தயாரிப்புகளான ஹார்லிக்ஸ் மற்றும் பூஸ்ட் பிராண்டுகளின் விற்பனையின் மூலம் மட்டுமே ரூ.4,200 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இந்தியாவில் ஊட்டச்சத்துப் பொருள்களின் விற்பனையில் ஹார்லிக்ஸ் 43% விற்பனையுடன் முதலிடத்தில் உள்ளது. இதற்கடுத்த நிலையில் போர்ன்விடா 13% விற்பனையாகிறது. 

கிளாஸ்கோ ஸ்மித் க்ளைன்

ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம், ஜி.எஸ்.கே. இந்தியா நிறுவனத்தை வாங்குவதோடு, பங்களாதேஷில் அந்த நிறுவனத்தின் 82% பங்குகளையும் கையகப்படுத்துவது குறிப்பிடத்தக்கதாகும்.