குஜராத்தில் நடந்த போலி என்கவுன்டர்களைக் கையிலெடுத்த உச்ச நீதிமன்றம் - மோடிக்கு முற்றும் நெருக்கடி! | supreme court take Gujarat encounter case against modi

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (04/12/2018)

கடைசி தொடர்பு:22:47 (04/12/2018)

குஜராத்தில் நடந்த போலி என்கவுன்டர்களைக் கையிலெடுத்த உச்ச நீதிமன்றம் - மோடிக்கு முற்றும் நெருக்கடி!

குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோதுன்டந்த 22 போலி என்கவுன்டர் வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

மோடி

நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த 2002 முதல் 2006-ம் ஆண்டு காலகட்டத்தில், தீவிரவாதிகள் எனச் சொல்லி 22 என்கவுன்டர்கள் நடத்தப்பட்டன. இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் பி.ஜி.வர்கீஸ் மற்றும் பாடலாசிரியர் ஜாவித் அக்தர் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்ந்த் தொடர்ந்தனர். இவ்வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பான விசாரணை அறிக்கைக்குப் பதில் மனுத்தாக்கல் செய்ய குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கை உச்ச நீதிமன்றம் எடுத்துக்கொண்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  அந்த 22 பேரில் பெரும்பாலானோர் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். 2007-ம் ஆண்டு, பி.ஜி.வர்கீஸ் மற்றும் பாடலாசிரியர் ஜாவித் அக்தர் உச்ச நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்தனர். அதில், 22 என்கவுன்டர்கள் போலியானவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம்

2012-ம் ஆண்டு, முன்னாள் நீதிபதி ஹெச்.எஸ்.பேடி தலைமையில், சுப்ரீம் கோர்ட் ஒரு குழுவை அமைத்தது.  அந்தக் குழுவின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கும்படி, அப்போது முதல்வராக மோடி தலைமையிலான குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அக்குழு தனது முழுமையான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்செய்துவிட்டது. இந்நிலையில், நேற்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், திபதிகள் எஸ்.கே. கவுல், கே.எம். ஜோஸப் ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.  மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனும், நித்யா ராமகிருஷ்ணனும் ஆஜராக, குஜராத் அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.

மோடி

அவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், “இவ்வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. தனிக் குழு அமைக்கப்பட்டு அறிக்கையும் தாக்கல்செய்யப்பட்டுவிட்டது. இப்போது என்ன செய்ய இருக்கிறீர்கள் என சொலிசிட்டர் ஜெனரல் துஷ்கர் மேத்தாவிடம் கேள்வி எழுப்பினார். அப்போது மனுதாரர்கள் தரப்பில், விசாரணை அறிக்கை வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். அதற்கு துஷ்கர் மேத்தா ஆட்சேபனை தெரிவித்து அறிக்கை நகலை அளிக்கக் கூடாது. விசாரணை அறிக்கைக்கு பதில் மனுவைத் தாக்கல்செய்ய கிறிஸ்துமஸ் வரை கால அவகாசம் வேண்டும் என்றார். அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி, டிசம்பர் 12-ம் தேதிக்குள் பதில் மனுவை தாக்கல்செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை டிசம்பர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.  போலி என்கவுன்டர்கள் நடைபெற்றதாகக் குறிப்பிட்டுள்ள காலத்தில், குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவியில் இருந்ததால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.