சொந்த ஊர் கோவில்பட்டி! - சபரிமலை சந்நிதானத்தைப் பாதுகாக்கும் எஸ்பி கருப்பசாமி | SP belongs to Tamilnadu now Sabarimala security officer

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (04/12/2018)

கடைசி தொடர்பு:13:20 (04/12/2018)

சொந்த ஊர் கோவில்பட்டி! - சபரிமலை சந்நிதானத்தைப் பாதுகாக்கும் எஸ்பி கருப்பசாமி

Yathish Chandra

பரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, சர்ச்சை வெடித்துள்ளது. பெண்கள் கோயிலுக்குள் நுழைய முயல்வதும் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்படுவதும் தொடர்கதையாகிவருகிறது. சமீபத்தில்,          பொன். ராதாகிருஷ்ணன் சபரிமலை சென்றபோது, நிலக்கல் பகுதி பாதுகாப்பு அதிகாரியாக இருந்த எஸ்பி யாதீஷ் சந்திராவால் தடுத்து நிறுத்தப்பட்டார். இருவருக்குமிடையே நடந்த வாக்குவாதத்தில், பொன். ராதாகிருஷ்ணனை போலீஸ் அதிகாரி யாதீஷ் சந்திரா அவமதித்ததாகச் சொல்லப்பட்டது. 

சபரிமலை பாதுகாப்பு அதிகாரி கருப்பசாமி

அந்த சர்ச்சையைத் தொடர்ந்து, யாதீஷ் சந்திரா சபரிமலைப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். நிலக்கல் பகுதி பாதுகாப்பு அதிகாரியாக, கேரள புலனாய்வுத் துறை ஐஜி அசோக் யாதவ் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, சபரிமலையின் முக்கியப் பகுதிகளுக்கு புதிய பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். தற்போது, வயநாடு எஸ்பி கருப்பசாமி, சந்நிதானம் பகுதிக்குப் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். கேரள கேடர் ஐபிஎஸ் அதிகாரியான இவர், தூத்தூக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர். இதுகுறித்து எஸ்பி கருப்பசாமியிடம் பேசியபோது, தகவலை உறுதிசெய்தார். தற்போது, 15 நாள்களுக்கு அங்கு பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

சபரிமலை

இதற்கிடையே , சபரிமலையில் நிலவும் சர்ச்சை, பாதுகாப்பு விஷயங்கள்குறித்து ஆய்வுசெய்ய கேரள உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழு, இன்று சரிமலை சந்நிதானம் சென்று  ஆய்வுசெய்ய உள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதிகள் பி.ஆர்.ராமன், ஸ்ரீ ஜெகன், முன்னாள் டிஜிபி ஹேமச்சந்திரன் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க