` சார்..ஜியோ வொர்க் ஆகலை!' - அம்பானிக்கே அதிர்ச்சி கொடுத்த போட்டோகிராபர் | jio not working photographer tells Mukesh Ambani

வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (04/12/2018)

கடைசி தொடர்பு:15:35 (04/12/2018)

` சார்..ஜியோ வொர்க் ஆகலை!' - அம்பானிக்கே அதிர்ச்சி கொடுத்த போட்டோகிராபர்

'ஜியோ சேவை சரியாக இயங்கவில்லை' என ஒரு போட்டோகிராஃபர் நேரடியாக அம்பானியிடமே தெரிவித்துள்ளார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் ஹிட் அடித்துவருகிறது.

பாலிவுட் நட்சத்திரங்கள் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுக்கோனின் திருமணம், கடந்த மாதம் இத்தாலியில் நடைபெற்றது. இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, கடந்த 1-ம் தேதி மும்பையில் நடைபெற்றது. இதில், திரை நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள், பிற துறையைச் சேர்ந்த பிரபலங்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில், ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி,  மனைவி நீதா அம்பானி, மகன்கள் ஆகாஷ், ஆனந்த் மற்றும் மகள் இஷா போன்ற மொத்த குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.  இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் பிரபலங்கள், அங்கு வந்திருந்த ஊடகத்தினர் மற்றும் புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுத்துச் சென்றனர். அப்படி அம்பானியின் மொத்த குடும்பமும் போட்டோவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தபோது ஒரு போட்டோகிராபர்,  ‘சார், ஜியோ சரியா வேலை செய்யல’ என்று அம்பானியிடம் கூறினார்.  (அவரின் குரல் மட்டும் வீடியோவில் கேட்கிறது)  அம்பானி இதைக் கவனித்ததாகத் தெரியவில்லை. மிகச் சாதாரணமாக நகர்ந்துசென்று தன் முன்னால் நின்றுகொண்டிருந்த நடிகர் சஞ்சய் தத்திடம் பேசத் தொடங்கினார். அம்பானியிடம், போட்டோகிராஃபர் புகார் அளித்த வீடியோ, சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகிவருகிறது. 

முகேஷ் அம்பானி இரண்டு வருடங்களுக்கு முன்பு, 'ஜியோ' என்ற டெலிகாம் சேவையைத் தொடங்கினார். இது தொடங்கப்பட்டபோது அனைவருக்கும் இவலச சிம், இலவச டேட்டா வழங்கி மிக விரைவில் அதிக வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்த்தவர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#ambani family at #deepikapadukone #ranveersingh #weddingreception #deepveerkishaadi @viralbhayani

A post shared by Viral Bhayani (@viralbhayani) on