வெளியிடப்பட்ட நேரம்: 09:09 (05/12/2018)

கடைசி தொடர்பு:09:46 (05/12/2018)

இஸ்ரோவின் புதிய சாதனை... வெற்றிகரமாக ஏவப்பட்ட ஜிசாட் 11 செயற்கைக்கோள்

இந்தியாவின் தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட் 11, தென் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவிலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது. 

ஜிசாட் 11

இந்தியாவில் இணையதளச் சேவையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றன. இணையதள வளர்ச்சிக்கு உதவும் வகையில், இஸ்ரோ சார்பில்  40 நவீன ட்ரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்ட ஜிசாட் 11 செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டது. கிராமப்புறப் பகுதிகளுக்கும் துல்லியமான சேவை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், கடந்த மே மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், 'ஜிசாட் - 6ஏ' செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தவேண்டியிருந்ததால், 'ஜிசாட் 11'ஐ தாமதமாகச் செலுத்த முடிவெடுக்கப்பட்டது. இதற்கிடையே, நேற்று நள்ளிரவு, ஜிசாட் 11 செயற்கைக்கோள் தென் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவில் உள்ள கூரு ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இது,  5,854 கிலோ எடை கொண்டது. 5,854 கிலோ எடை என்பது அதிகமான எடை என்பதால், அதை இந்தியாவில் அனுப்ப இயலாது.

செயற்கைக்கோள்

எனவே, தென் அமெரிக்காவின் கூரு ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், 'ஜிசாட் 11' இந்தியா இதுவரை செலுத்தியுள்ள தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்களிலேயே அதிக கனமானதும்கூட. வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டவுடன், அதன் கட்டுப்பாடு கர்நாடகாவில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு மாற்றப்பட்டது. இருப்பினும் சோதனைகளுக்குப் பின்பே ஜிசாட் 11 செயற்கைக்கோள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோ சிவன்

இதற்கிடையே, கடந்த 21 நாள்களில் மூன்று செயற்கைக்கோள்களையும், இரண்டு ராக்கெட்டுகளையும் ஜிசாட் 11 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது இஸ்ரோ.

நீங்க எப்படி பீல் பண்றீங்க