வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (05/12/2018)

கடைசி தொடர்பு:17:25 (05/12/2018)

ஃபோர்ப்ஸ் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடத்தில் சல்மான்கான்!

நடிகை தீபிகா படுகோன் ரூ.112.8 கோடி வருமானத்துடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். ஃபோர்ப்ஸ் பட்டியலில் முதல் 5 இடங்களுக்குள் இடம்பிடித்த முதல் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார். 

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள, அதிக வருமானம் ஈட்டிய டாப் 100 இந்திய செலிபிரிட்டிகளின் பட்டியலில் நடிகர் சல்மான்கான் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளார். திரைப்படங்களில் நடித்தது, தொலைக்காட்சிகளில் தோன்றியது, தயாரிப்புகளின் பிராண்ட் தூதராக பணியாற்றுவதன்மூலமாக இந்த வருமானத்தை ஈட்டியுள்ளார். 

சல்மான்

கடந்த 2017 அக்டோபர் 1 முதல் 2018 செப்டம்பர் 30 வரையிலான ஓராண்டு காலத்தில் இவர்களது வருமானத்தை ஒப்பீடு செய்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ரூ.253.25 கோடி வருமானத்துடன் சல்மான்கான் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ரூ.228.09 கோடி வருமானத்துடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். 2.0 வில்லன் நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.185 கோடி வருமானத்துடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். நடிகை தீபிகா படுகோனே ரூ.112.8 கோடி வருமானத்துடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். இதன்மூலம், ஃபோர்ப்ஸ் பட்டியலில் முதல் 5 இடங்களுக்குள் இடம்பிடித்த முதல் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார். 

சல்மான் கான்

கிரிக்கெட் வீரர்களைப் பொறுத்தவரை, விராட் கோலிக்கு அடுத்ததாக தோனி ரூ.101.77 கோடி வருமானத்துடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். டாப் 100 பட்டியலில் இடம்பிடித்துள்ளவர்களின் மொத்த வருமானம் ரூ.3,140.25 கோடிகளாகும்.