காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகள்! - அபாயத்தில் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் | India and neighbours countries most vulnerable to climate change

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (05/12/2018)

கடைசி தொடர்பு:23:00 (05/12/2018)

காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகள்! - அபாயத்தில் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள்

குறைந்த நேரத்தில் பெய்யும் அதிகமான மழை, வெள்ளம், தீவிரமான புயல்கள் போன்ற இயற்கை, அதீதமான வெப்பநிலை என இயற்கைச் சீற்றங்களெல்லாம் இப்போது சாதாரணமாக நிகழ ஆரம்பித்துவிட்டன.

காலநிலை மாற்றம்தான் இவற்றுக்கெல்லாம் காரணம் எனப் பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், அதைத் தடுக்கும்விதமான முன்னேற்பாடுகள் உலகம் முழுவதும் இப்போதுவரை பெரிதாக எடுக்கப்படவில்லை. ஆனால், காலநிலை மாற்றத்தால் அதிகமாகப் பாதிக்கப்படுவதோ சிற்சில நாடுகள்தான். போலாந்து நாட்டின் கடோவைஸ் (Katowice) நகரில் 2019-ம் ஆண்டுக்கான உலகளாவிய காலநிலை அபாய அட்டவணை (Global Climate Risk Index 2019) வெளியிடப்பட்டுள்ளது.

காற்று மாசு

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் அதிகமாகப் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளனர். இதில் இந்தியாவுக்கு 14 வது இடம். முதல் இடத்தில் தீவு நாடான பியர்ட்டோ ரிகோ உள்ளது. பல்வேறு புயல்களும் கடல்நீர் மட்டம் உயர்வும் இந்தத் தீவு நாட்டை நிறைய பாதிக்கிறது. இரண்டாவது இடத்தில் இலங்கை, நான்காவது இடத்தில் நேபாளம், ஒன்பதாவது இடத்தில் வங்காளதேசம் என இந்தப் பட்டியலில் முதல் 20 இடங்களில் அதிகம் இடம் பெற்றிருப்பது தெற்காசிய நாடுகள்தான். 

காலநிலை மாற்றம்

இந்தியாவில் அதீத காலநிலை தொடர்பான நிகழ்வுகளான வறட்சி, வெள்ளம், புயல்கள் வெப்ப அலைகள் ஆகியவற்றின் காரணமாக 2017-ல் மட்டும் 2,726 பேர் இறந்துள்ளனர். 13.8 பில்லியன் டாலர்கள் பொருளாதார இழப்பு இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. 1998 மற்றும் 2017-க்கு இடைப்பட்டக்காலத்தில் உலகம் முழுவதும் நடைபெற்ற 11.500-கும் மேற்பட்ட தீவிர வானிலை நிகழ்வுகளின் விளைவாக 5,26,000-க்கும் அதிகமானோர் உலகளவில் இறந்துள்ளனர் மற்றும் 13.47 டிரில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது என்று காலநிலை அபாய அட்டவணை தயாரித்த பெர்லின் அடிப்படையிலான சுற்றுச்சூழல் அமைப்பான ஜேர்மன்வாட்ச் அறிக்கை தெரிவிக்கிறது. 
இந்தப் பாதிப்புகள் இன்னும் அதிகரிக்கவும் வாய்ப்புகள் அதிகம்