`ஆயுளைக் குறைக்கும் காற்று மாசுபாடு: எச்சரிக்கும் ஆய்வு! | One in 8 deaths in India due to air pollution, life expectancy down by 1.7 years: Report

வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (06/12/2018)

கடைசி தொடர்பு:16:35 (06/12/2018)

`ஆயுளைக் குறைக்கும் காற்று மாசுபாடு: எச்சரிக்கும் ஆய்வு!

ந்தியாவில் 8 பேரில் ஒருவர் உயிரிழக்க காற்று மாசுபாடு காரணமாக அமைந்திருப்பதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையுடன் இணைந்து பல்வேறு அமைப்புகள் நடத்திய மருத்துவ ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. 

காற்று மாசுபாடு

உலக மக்கள் தொகையில் இந்தியா 18 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. இந்நிலையில், உலக அளவில் நோய் மற்றும் முன்கூட்டியே ஏற்படும் திடீர் மரண விகிதங்களைக் காட்டிலும் இந்தியாவில் காற்று மாசுபாட்டால் உயிரிழப்பவர்களின் விகிதம் அதிகமாக, அதாவது 26 சதவிகிதம் அளவுக்கு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. 

இந்த ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* இந்தியாவில் நிகழும் ஒவ்வொரு 8 மரணத்திலும் ஒருவர் காற்று மாசுபாட்டால் உயிரிழக்கிறார். 2017-ம் ஆண்டு இந்தியாவில் உயிரிழந்த 12.4 லட்சம் பேரில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் மரணத்துக்குக் காற்று மாசுபாடுதான் காரணம். இவ்வாறு உயிரிழந்தவர்கள் 70 வயதுக்கும் குறைவானவர்களே. 

* உடல் நலத்தைப் பாதிக்கக்கூடிய காற்றுமாசுபாட்டின் அளவு குறைந்தபட்ச அளவுக்கும் கீழ் இருந்தால், இந்தியர்களின் ஆயுள்காலம்
1.7 வருடங்கள் அதிகரிக்கும். 

* பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களால் ஏற்படும் மரணங்களைவிட காற்று மாசுபாட்டால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. 

* காற்றின் தரம் குறித்த தேசிய சுற்றுச்சூழலின் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலான அளவுடன்கூடிய காற்றுமாசுபாட்டைத்தான் 77% இந்தியர்கள் வீட்டுக்கு வெளியே வரும்போது எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, வட இந்தியாவில்தான் இந்தக் காற்றுமாசுபாடு அதிகமாகக் காணப்படுகிறது. 

போக்குவரத்து மாசுபாடு

* வீடுகளில் காற்றுமாசுபாட்டுக்கு முக்கியக் காரணமான விறகு போன்ற திட எரிபொருளைச் சமைப்பதற்குப் பயன்படுத்துவது தற்போது குறைந்துள்ளது. இதைத் தக்க வைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, வளர்ச்சி குறைந்த சில மாநிலங்களில் இன்னமும் அதிகமாகக் காணப்படுகிற வீட்டு காற்று மாசுப்பாட்டின் அளவைக் குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 

* இந்தியாவில் காற்று மாசுபாட்டுக்குக் காரணமான பல்வேறு காரணிகளைக் கண்டறிந்து, அவற்றைத் தீர்ப்பதற்குத் திட்டமிட்ட முயற்சிகள் தேவை. போக்குவரத்து வாகனங்கள், கட்டுமான நடவடிக்கைகள், தொழிற்சாலைகள் மற்றும் அனல் மின் நிலையங்கள் வெளியிடும் புகை, குடியிருப்புகள் மற்றும் வர்த்தகப் பகுதிகளில் பயன்படுத்தப்படும் திட எரிபொருள்களின் பயன்பாடு, குப்பைகள் மற்றும் வேளாண் கழிவுகளை எரிப்பது, டீசல் ஜெனரேட்டர் பயன்பாடு மற்றும் சாலைகளில் மனிதர்கள் பெருக்குவதால் எழும் தூசு போன்றவை இந்தியாவின் காற்று மாசுக்கு முக்கியக் காரணமாக உள்ளன. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க