உலக மருத்துவத்தில் புதிய திருப்புமுனை! - அறுவை சிகிச்சையில் சாதனை படைத்த இந்திய மருத்துவர் | Dr Tejas Patel conducted the world’s first telerobotic surgery in Ahmedabad

வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (06/12/2018)

கடைசி தொடர்பு:16:50 (06/12/2018)

உலக மருத்துவத்தில் புதிய திருப்புமுனை! - அறுவை சிகிச்சையில் சாதனை படைத்த இந்திய மருத்துவர்

உலக மருத்துவத் தொழில்நுட்பத்தில் குஜராத் மருத்துவர் ஒரு புதிய சாதனையைச் செய்து அசத்தியுள்ளார். 

மருத்துவர் தேஜஸ் அடேல்

Photo : Twitter/@Gurpree46492633

உலக மருத்துவத்தில் ஒரு புதிய மைல் கல்லை எட்டியுள்ளார் குஜராத்தைச் சேர்ந்த இதய மருத்துவர் தேஜஸ் படேல். இவர் டெலி ரோபோடிக் தொழில்நுட்பம் மூலம் நோயாளிக்கு முதல் முறையாக அறுவை சிகிச்சை செய்து வெற்றி பெற்றுள்ளார். டெலி ரோபோடிக் என்பது ரோபோட்களைக் கொண்டு ரிமோட் உதவியுடன் நோயாளிக்கு தூரத்தில் இருந்து அறுவை சிகிச்சை செய்வது.

ரோபோட் அறுவை சிகிச்சை

இவர் இதயம் தொடர்பான நோய்களைக் கண்டறிந்து அதைச் சரிசெய்வதில் வல்லவர். மருத்துவர் படேல் அதிகம் ரோபோடிக் தொழில்நுட்பத்தை தன் மருத்துவத்தில் பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில், உலகிலேயே முதல்முறையாக இதய அறுவை சிகிச்சையில் ரோபோட்களைப் பயன்படுத்தியுள்ளார். நேற்று, காந்திநகரிலுள்ள அக்ஷர்தம் கோயிலிலிருந்து, 30 கிலோ மீட்டர் தொலைவில் ரத்தக் குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

இதய மருத்துவம்

இது பற்றி பேசிய மருத்துவர் தேஜஸ்,  `` 20mpbs வேகம் கொண்ட இணையவசதியைப் பயன்படுத்தி இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் மூலம் கரோனரிகளை (இதய உறுப்பு) எளிதில் இடம் மாற்றலாம் என நான் நம்பினேன். இந்த தொழில்நுட்பம் மூலம் கிராமப் பகுதியில் உள்ள மக்களுக்கு எளிதில் பல சிகிச்சைகளை வழங்க முடியும்” என கூறியுள்ளார்.