வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (06/12/2018)

கடைசி தொடர்பு:18:15 (06/12/2018)

பி.ஜே.பி., காங்கிரஸுக்குக் கைகூடுமா 5 மாநிலத் தேர்தல்?

பி.ஜே.பி., காங்கிரஸுக்குக் கைகூடுமா 5 மாநிலத் தேர்தல்?

த்தீஸ்கர் உட்பட 5 மாநிலத் தேர்தல் முடிவுகளை மத்தியில் ஆளும் பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்நோக்கி உள்ளது.

ஐந்து மாநிலங்களின் சட்டசபைக்கு அறிவிக்கப்பட்ட தேர்தல்களில், தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் டிசம்பர் 7-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிஜோரம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் வாக்குப்பதிவு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளன. தெலங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களின் வாக்குப்பதிவும் முடிந்தகையோடு, வரும் 11-ம் தேதி ஐந்து மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

5 மாநிலத் தேர்தல் - ராகுல், சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர்

இதற்கிடையே, டிசம்பர் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள இரு மாநிலங்களிலும் அதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தெலங்கானா மாநிலத்தைப் பொறுத்தவரை டி.ஆர்.எஸ், காங்கிரஸ்-தெலுங்குதேசம் மற்றும் பி.ஜே.பி ஆகிய மூன்று அணிகள் களத்தில் உள்ளன. தற்போது ஆட்சியில் இருக்கும் டி.ஆர்.எஸ் கட்சியின் தலைவரும், முதல்வருமான சந்திரசேகர ராவ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டு முதல் தேர்தலில் பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைத்து வெற்றிபெற்ற அவர், இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறார். மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் அவர் ஏற்கெனவே வெளியேறி விட்டார்.

கே. சந்திரசேகர ராவ் - 5 மாநிலத் தேர்தல்என்றாலும், பி.ஜே.பி-யின் கைப்பாவையாகச் சந்திரசேகர ராவ் செயல்படுகிறார் என்று காங்கிரஸ் கட்சியும், தெலுங்குதேசம் கட்சியும் குற்றம்சாட்டி வருகின்றன. பி.ஜே.பி-யைப் பொறுத்தவரை, அதன் முதல் எதிரியாகக் காங்கிரஸ் - தெலுங்குதேசம் கூட்டணியையே கருதுகிறார். தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும், கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்தார். தெலங்கானா மாநிலப் பிரிப்புக்குப் பின்னர், ஆந்திர மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து அளிப்பதாகக் கூறி மத்திய அரசு ஏமாற்றி விட்டதாகவும், அதன் காரணமாக ஆந்திர மாநிலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தச் சூழலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து தெலங்கானா சட்டசபைத் தேர்தலைச் சந்திக்கிறார். இந்தக் கூட்டணி, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெலங்கானா மாநிலத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதிசெய்யும் பொருட்டு, ஒரு லட்சத்து 60 ஆயிரம் அலுவலர்கள் தேர்தல் தொடர்பான பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநிலக் காவல்துறையில் 30 ஆயிரம் பேருடன் 270 கம்பெனி மத்திய ஆயுதப் படையினரும் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அண்டை மாநிலங்களிலிருந்து 18 ஆயிரம் படையினரும் பாதுகாப்புப் பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.

தெலங்கானாவில் சுமார் நான்கரை லட்சம் மாற்றுத்திறனாளிகள் உட்பட 2 கோடியே 80 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். மாநிலம் முழுவதும் 31 மாவட்டங்களில் 32,815 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தெலங்கானாவில் மொத்தம் 119 சட்டசபை உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கு 135 பெண்கள் உட்பட 1821 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 

5 மாநிலத் தேர்தல் - மக்கள் வரிசையில் வாக்களித்தனர்இதேபோல் ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தலுக்காக 51,687 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது ஒரு பெண்களுக்கான பிரத்யேக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் தங்களின் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையைக் காண்பித்து வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக ராஜஸ்தான் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, மிக அதிக எண்ணிக்கையிலான மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல் என்பதால், மத்தியில் ஆளும் பி.ஜே.பி. இந்தத் தேர்தல் முடிவுகளை மிகுந்த ஆவலோடு எதிர்நோக்கியுள்ளது. 

சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் தற்போது பி.ஜே.பி-யே ஆட்சியில் உள்ளதால், இந்த மாநிலங்களில் ஆட்சியைத் தக்கவைக்கவும், தெலங்கானா மற்றும் மிஜோரமில் ஆட்சியைக் கைப்பற்றவும் பி.ஜே.பி. தீவிர முனைப்பு காட்டி வருகிறது. 

அதேநேரத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்று தீவிரத்துடன் காங்கிரஸ் கட்சி பிரசாரம் செய்துள்ளது. ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவரான பின்னர் நடைபெறும் மிக முக்கியமான சட்டப்பேரவைத் தேர்தல் என்பதால், அந்தக் கட்சியும் வெற்றியை ருசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது என்றே கூறலாம். தெலங்கானாவில், டி.ஆர்.எஸ் உடன் தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பு பி.ஜே.பி-க்கும், ஆளும் டி.ஆர்.எஸ் கட்சிக்கும் உள்ளதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

தெலங்கானாவில் ஆட்சியமைத்தால் இரு மாநிலங்களில் ஆட்சியமைத்த பெருமை தெலுங்கு தேசம் கட்சிக்குக் கிடைக்கும் என்பதால், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டுள்ளது அந்தக் கட்சி. 

இதுபோன்ற யூகங்களுக்கு எல்லாம் டிசம்பர் 11-ல் விடை கிடைத்து விடும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்