`நன்றி ஃபோர்ப்ஸ்; மீண்டும் வேலையைத் தொடங்கிவிட்டேன்’ - பிரியங்கா சோப்ரா நெகிழ்ச்சி | Priyanka Chopra reacts to being included in Forbes list of most powerful Women

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (06/12/2018)

கடைசி தொடர்பு:20:30 (06/12/2018)

`நன்றி ஃபோர்ப்ஸ்; மீண்டும் வேலையைத் தொடங்கிவிட்டேன்’ - பிரியங்கா சோப்ரா நெகிழ்ச்சி

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலகின் சக்திவாய்ந்த பெண்மணிகள் பட்டியலில் இரண்டாவது முறையாக இடம்பெற்றது குறித்து பிரியங்கா சோப்ரா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ப்ரியங்கா சோப்ரா

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் பிரியங்கா சோப்ரா பெயரும் இடம்பெற்றுள்ளது. இதில் அவர் 94-வது இடம் பிடித்துள்ளார். சமீபத்தில்தான் பிரியங்கா சோப்ராவுக்கும் நிக் ஜோனஸ்க்கும் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில்தான் ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது.  

திருமணம்

இதுகுறித்து பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபோர்ப்ஸ் பத்திரிகைக்கு நன்றி தெரிவித்துள்ளார். திருமணம் முடிந்தவுடன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது பெயரை பிரியங்கா சோப்ரா ஜோனஸ் என்று பெயர் மாற்றம் செய்துள்ளார். அவரது இன்ஸ்டா பதிவில், ``உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் இரண்டாவது முறையாக எனது பெயரைச் சேர்த்து கௌரவித்ததற்கு நன்றி ஃபோர்ப்ஸ். இது என்னுடைய ஆவலை மேலும் தூண்டுவதாக உள்ளது. நான் விரும்புவதைச் செய்ய இது தொடர்ந்து உந்து சக்தியாக இருக்கிறது. மீண்டும் வேலை செய்யத் தொடங்கிவிட்டேன்’’ எனப் பதிவிட்டுள்ளார்.