வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (07/12/2018)

கடைசி தொடர்பு:14:05 (07/12/2018)

நவீன மீன்கடை திறந்த ஹனானுக்கு முதல் நாளே ரூ.3,500 லாபம்!

கேரளாவில், ஹனான் என்ற மாணவி தெருவில் மீன் விற்று படித்துக்கொண்டிருந்தார். இவரைப் பற்றிய செய்தி 'மாத்ரூபூமி' நாளிதழில் வெளியானதும், உதவிகள் குவிந்தன.  ஹனான் திட்டமிட்டு தன்னைப் பற்றிய செய்தி வெளியிட வைத்ததாகச் சிலர் குற்றம் சாட்டினர். சமூக வலைதளங்களில் அவரைப் பற்றி அவதூறு பரப்பினர். கேரள முதல்வர் பினராயி விஜயனே நேரடியாக இந்த விஷயத்தில் தலையிட்டார். தொடர்ந்து, அவதூறு பரப்பிய இருவர் கைதுசெய்யப்பட்டனர். எனினும், ஹனான் பற்றிய அவதூறு பரவுவது நிற்கவில்லை. சமீபத்தில்கூட ஹனான் ஹுக்கா குடிப்பது போன்ற வீடியோவை வெளியிட்டு அவரைக் காயப்படுத்தினர். 

ஹனான்

pic coursesy: mathrubhumi

தன் மீதான விமர்சனங்களைக் கண்டு துவண்டுவிடாத ஹனான், கடுமையாக உழைக்கத் தொடங்கியுள்ளார். முன்பு, கல்லூரி முடிந்ததும்  சாலையோரத்தில் மீன் விற்றுக்கொண்டிருந்த ஹனான், தற்போது மீன் விற்பனை செய்வதற்காக நவீன வசதிகள்கொண்ட வாகனத்தை வங்கியில் லோன் எடுத்து வாங்கியுள்ளார். இந்த வாகனத்தில் ஃப்ரீஸர் பொருத்தப்பட்டுள்ளது. மீன்களை அடுக்கிவைக்கவும் வசதி உள்ளது. கடையின் பெயர் 'வைரல் ஃபிஷ்.'  மாத்ருபூமி வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து, ஹனான் ஆன்லைனில் வைரலாகி, இந்தியா முழுக்க ஒரே நாளில் பாப்புலர் ஆனார். எனவே, அந்தப் பெயரிலேயே கடையைத் தொடங்கியுள்ளார். கொச்சியில் தமன்னம் பகுதியில் நேற்று வைரல் ஃபிஷ் மீன் கடையை  மலையாள நடிகர் சலீம் குமார் திறந்துவைத்தார். முதல் நாள் விற்பனையின்மூலம் ஹனானுக்கு ரூ.3,500 லாபம் கிடைத்தது. 

ஹனான் குறித்து செய்தி வெளியானதும், அவருக்கு நிதியுதவி வழங்க ஏராளமானோர் முன் வந்தனர். சமூக வலைதளங்களில் எழுந்த சர்ச்சையைத்தொடர்ந்து அவர் நிதியைப் பெற மறுத்துவிட்டார். சொந்தக் காலில் நின்று சாதிக்கும் ஹனான், மனநலம் குன்றிய தாயாரையும் கவனித்துக்கொண்டு மீன் விற்பனையும் செய்துவருகிறார். டாக்டராவது ஹனானின் லட்சியம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க