கண்கள் சொருகியபடி கீழே சரிந்த கட்கரி! - தாங்கிப் பிடித்த ஆளுநர் | Nitin Gadkari fainted and collapsed during a function in Maharashtra

வெளியிடப்பட்ட நேரம்: 16:27 (07/12/2018)

கடைசி தொடர்பு:16:27 (07/12/2018)

கண்கள் சொருகியபடி கீழே சரிந்த கட்கரி! - தாங்கிப் பிடித்த ஆளுநர்

உடல்நலக் குறைவு காரணமாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பொது நிகழ்ச்சியின் மேடையிலேயே மயங்கி விழுந்தார். 

நிதின் கட்கரி

மகாராஷ்டிராவின் அஹமத் நகரில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி உட்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டவுடன் அனைவரும் எழுந்து நின்றிருந்தனர். அப்போது அமைச்சர் நிதின் கட்கரியும் எழுந்து நின்றிருந்தார். பின்னர் அடுத்த சிறிது நேரத்தில் கண்கள் சொருகியபடி மேடையிலேயே கீழே சரிந்தார். உடனடியாக அருகில் இருந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், அவரைத் தாங்கிப்பிடித்து அமரவைத்தார். அடுத்த நொடியில் அவரின் பாதுகாப்பாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் எனப் பெரிய கூட்டம் கட்கரியை சுற்றிக்கொண்டது. 

மயங்கி விழுந்த நிதின் கட்கரி

பிறகு, கட்கரிக்கு தண்ணீர் கொடுத்து முதலுதவி செய்தனர். இதையடுத்து அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு, தான் நலமாக இருப்பதாக கட்கரி ட்வீட் செய்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், ``சர்க்கரை நோய் காரணமாகத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மருத்துவரைச் சந்தித்தபின் தற்போது நான் நலமாக உள்ளேன். என் நலன் விரும்பிகள் அனைவருக்கும் எனது நன்றிகள்” எனக் குறிப்பிட்டிருந்தார். அமைச்சர் மயங்கி விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


[X] Close

[X] Close