`கட்டுக்கட்டாகச் சிக்கிய ஆவணங்கள்' - வதேராவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமலாக்கத்துறை! | Enforcement Directorate Friday searched the premises of three persons linked to firms of Robert Vadra

வெளியிடப்பட்ட நேரம்: 08:33 (08/12/2018)

கடைசி தொடர்பு:11:51 (08/12/2018)

`கட்டுக்கட்டாகச் சிக்கிய ஆவணங்கள்' - வதேராவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமலாக்கத்துறை!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா அலுவலகத்தில் நள்ளிரவில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி அதிரடி காட்டியுள்ளது. 

வதோரா

photo credit: @irobertvadra

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா. இவருக்கு அரியானா, ராஜஸ்தான் மாநிலத்தில் முறைகேடாக நிலங்கள் வழங்கப்பட்டது தொடர்பாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. நில பரிமாற்றத்தின்போது சட்டவிரோத பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாகக் கூறி அமலாக்கத்துறை வதேரா மீது வழக்குப் பதிந்துள்ளது. 

ஆவணங்கள்

இந்தக் குற்றச்சாட்டு குறித்த விசாரணை பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. ஆனால், பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வதேரா விசாரணைக்கு ஆஜராகவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு டெல்லி சுக்தேவ் விகார் பகுதியில் உள்ள ராபர்ட் வதேரா அலுவலகத்தில் புகுந்து அமலாக்கத்துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தினர். 

ஆவணங்கள்

இதேபோல் வதேராவின் நெருங்கிய நண்பர்கள் மூவரின் வீடுகளிலும் அதிகாரிகள் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டனர். பல மணி நேரம் நீட்டித்த இந்தச் சோதனையில் கட்டுக்கட்டாக ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். இதனால் இந்த விவகாரம் மீண்டும் பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது. ஆனால், அரசியல் காழ்ப்பு உணர்ச்சியுடன் ரெய்டு நடந்திருப்பதாக வதேரா குற்றம் சாட்டியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க