`இப்போது மகிழ்ச்சி' - மத்திய அரசைச் சாடும் ப.சிதம்பரம்! | p.chidambaram tweet about former officers are speeking about goverment

வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (10/12/2018)

கடைசி தொடர்பு:08:37 (10/12/2018)

`இப்போது மகிழ்ச்சி' - மத்திய அரசைச் சாடும் ப.சிதம்பரம்!

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் தங்களது அச்சத்தையும், மௌனத்தையும் கலைந்து மத்திய அரசை விமர்சிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

ப சிதம்பரம்

சமீப காலமாகவே ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. மத்திய அரசு வெளியிட்ட ஜி.டி.பி புள்ளி விவரத்தைப் பல்வேறு பொருளாதார நிபுணர்கள் விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், "ரிசர்வ் வங்கியின் சுதந்திரமும், தன்னாட்சியும் காக்கப்பட வேண்டும். பணமதிப்பு நீக்கம், பெருமளவு அதிர்ச்சி அளித்த முடிவு" என்று வெளிப்படையாகவே தனது கருத்தைத் தெரிவித்தார். 

அரவிந்த் சுப்ரமணியன்

இதையடுத்து, சமீபத்தில் ஓய்வுபெற்ற தலைமைத் தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத், ``பணமதிப்பு நீக்கம் தேர்தல்களில் கறுப்புப் பண புழக்கத்தைத் தடுக்கவில்லை" என்று தெரிவித்தார். இப்போது வடக்கு பிராந்திய ராணுவ தளபதியாக இருந்து ஓய்வுபெற்ற டி.எஸ்.ஹூடா, ``ராணுவ துல்லிய தாக்குதல் தேவையில்லாமல் பெரிதுபடுத்தப்பட்டு அரசியல் ஆக்கப்பட்டது" என்று கூறினார்.

ஓ.பி.ராவத்

இவற்றைச் சுற்றிக்காட்டி முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ``முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் தங்களது அச்சத்தை விட்டு மௌனத்தைக் கலைத்து மத்திய அரசை விமர்சிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க