வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (10/12/2018)

கடைசி தொடர்பு:11:56 (12/12/2018)

நாளுக்கு 40 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை! - அம்பானி மருமகனின் பின்புலம் என்ன?

முகேஷ் அம்பானி - நீடா தம்பதியின் மகள், இஷாவுக்கும் பிரமால் குழுமத்தின் தலைவர் அஜய் - ஸ்வாதி தம்பதியின் மகன் ஆனந்த் பிரமாலுக்கும் வரும் 12-ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்துக்கு முந்தைய சடங்குகள், உதய்பூரில் 2 நாள்கள் நடந்தது. இதனால், உதய்பூரே அமர்க்களப்பட்டது. ஹிலரி கிளின்டன் முதல், நம்ம ஊரு வித்யாபாலன் வரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பித்தனர். இஷா அம்பானியைக் கரம்பற்றும் ஆனந்த் பிரமால் யார்? கடந்த ஆண்டு வரை  இந்த அளவுக்கு பிரபலமடையவில்லை. இப்போதோ, ஆனந்த் பிரமாலை கூகுளில் ஆயிரக்கணக்கானோர் தேடத் தொடங்கியுள்ளனர். 

அஜய் மற்றும் இஷா அம்பானி

இந்தியாவின் முதல் பெரும்  பணக்கார வீட்டுப் பெண்ணை மணக்கப்போகும் ஆனந்த் பிரமால், பென்சில்வேனியா பல்கலையில் பொருளாதாரம் படித்துவிட்டு ஹார்வர்ட் பல்கலையில் எம்.பி ஏ முடித்தவர்.  இதே காலகட்டத்தில், இஷா, ஸ்டேன்ஃபோர்ட் பல்கலையில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார். எம்.பி.ஏ படித்த பிறகு, பிரமால் குழுமத்தில் ஆனந்த் இயக்குநராக இருந்தார். இந்த காலகட்டத்தில்தான் 'பிரமால் ஸ்வாஸ்த்யா' என்கிற அறக்கட்டளையை ஆரம்பித்து, கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை கிடைக்கச்செய்தார். இந்த அமைப்பு வழியாக நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் நோயாளிகள் பயனடைந்துவருகிறார்கள். தேசிய கிராமப்புற சுகாதார அமைப்புடன் கைகோத்து, இந்த அமைப்பு செயல்படுகிறது. பிரமால், ரியாலிட்டி என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தைத் தொடங்கி, வெற்றிகரமாக நடத்திவருகிறார். 

அம்பானி குடும்பம்

அம்பானி குடும்பமும் பிரமால் குடும்பமும் 40 ஆண்டுக்கால நட்பு கொண்டது. இரு குடும்பத்துக்கும் நெருக்கம் அதிகம். இதனால், ஆனந்த், இஷா சிறுவயது முதலே நண்பர்கள். இந்த வருட தொடக்கத்தில், ஆனந்த் பிரமால்தான் இஷாவை புரபோஸ் செய்துள்ளார். இஷாவும் ஓகே சொல்ல, முகேஷ் அம்பானியின் ஆன்டலியா இல்லத்தில் நண்பர்கள் இருவரும் சேர்ந்து விருந்தளித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து, இத்தாலியில் உள்ள லேக் கோமோ நகரத்தில், இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

முகேஷ் அம்பானி கூறுகையில், ''எங்கள் குடும்பத்தில் எல்லோருமே லேட்டா படுத்து லேட்டாவே எழும் வழக்கம் உண்டு. இஷாவும் அப்படித்தான் லேட்டாகவே எழுவாள். பிரமால் குடும்பத்தினர் அப்படியில்லை. அதிகாலையிலேயே எழும் பழக்கம் கொண்டவர்கள். ஆனந்த் பிரமாலை பின்பற்றி, இஷாவும் அதிகாலையிலேயே எழத் தொடங்கினாள். அப்படித்தான், இஷாவின் காதல் எங்களுக்குத் தெரியவந்தது'' என்கிறார் சிரித்தபடி. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க