வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (11/12/2018)

கடைசி தொடர்பு:07:35 (11/12/2018)

`இந்தியப் பொருளாதாரத்தின் மீது விழுந்த பெரும் அடி' - மன்மோகன் சிங்!

மீப காலமாகவே மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கி ஆளுநருக்கும் மோதல் போக்கு நீடித்து வந்தது. இந்த நிலையில் தனிப்பட்ட காரணங்களைக் காரணம் காட்டி இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பதவி வகித்தமைக்காகப் பெருமை கொள்வதாகவும், சக ஊழியர்களுக்கும், இயக்குநர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியிருந்தார். 

உர்ஜித் படேல்

மத்திய அரசுடன் மோதல் போக்கு இருந்து வந்த நிலையில் அவருடைய ராஜினாமா முடிவு இந்தியாவில் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியல் தலைவர்கள் அனைவரும் கடுமையாக மத்திய அரசை விமர்சித்து வருகிறார்கள்.

டெல்லியில் எதிர்க்கட்சிகளின் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்திந்த ராகுல் காந்தி, ``ரிசர்வ் வங்கி உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகளைப் பா.ஜ.க-விடமிருந்து காப்பாற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.

மன்மோகன் சிங்


இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியிலிருந்து உர்ஜித் ராஜினாமா  செய்திருப்பது மன வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவின் நிதிக் கொள்கை, பொருளாதார அமைப்பு மீது  அதீத அக்கறை கொண்டவரான உர்ஜித் ராஜினாமா செய்திருப்பது துரதிஷ்டவசமானது. இந்தியப் பொருளாதாரத்தின் மீது விழுந்த பெரும் அடி" என்று தெரிவித்திருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க