`என் உயிர்த் தோழியே, காதலியே!‍' - முதல் திருமணநாளில் மனைவியைக் கொஞ்சிய கோலி | Virat Anushka couples Celebrates First Anniversary

வெளியிடப்பட்ட நேரம்: 12:17 (11/12/2018)

கடைசி தொடர்பு:13:25 (11/12/2018)

`என் உயிர்த் தோழியே, காதலியே!‍' - முதல் திருமணநாளில் மனைவியைக் கொஞ்சிய கோலி

நேரம் உண்மையில் வேகமாகக் கடக்கிறது. திருமண வாழ்க்கை குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

விராட் கோலி

விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா தம்பதி இன்று தங்களது முதலாவது திருமண நாளைக் கொண்டாடுகின்றனர். இத்தாலியில் திருமண வாழ்க்கையைத் தொடங்கிய இந்த நட்சத்திரக் காதலர்கள் ஆஸ்திரேலியாவில் முதலாவது திருமண நாளைக் கொண்டாடி வருகின்றனர். இந்தியக் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. நடிகை அனுஷ்காவும் ஆஸ்திரேலியாவில்தான் உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இந்த உற்சாகத்தில் கோலி தனது முதலாவது திருமண நாளைக் கொண்டாடி வருகிறார்.

அனுஷ்கா ஷர்மா

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கோலி, ``ஒரு வருடம் கடந்து விட்டதை நம்பமுடியவில்லை. நேற்று நடந்ததுபோல் இருக்கிறது. நேரம் உண்மையில் வேகமாகக் கடக்கிறது. திருமண நாள் வாழ்த்துகள் என் உயிர்த் தோழி... காதலி அனுஷ்கா என்று பதிவிட்டுள்ளார். இதில் தங்களது திருமண நாள் புகைப்படங்கள் சிலவற்றையும் அவர் பதிவிட்டுள்ளார். 

கோலி - அனுஷ்கா

அனுஷ்காவும் தனது ட்விட்டர் பக்கத்தில், `நீங்கள் ஒரு நல்ல மனிதரைத் திருமணம் செய்யும்போது இது சொர்க்கம்’ எனப் பதிவிட்டுள்ளார். இருவருக்கும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.