வெளியிடப்பட்ட நேரம்: 17:42 (11/12/2018)

கடைசி தொடர்பு:17:50 (11/12/2018)

'ஆன்லைன்ல அனுப்புங்களேன்'- நஷ்டமடைந்த விவசாயிக்கு ஷாக் கொடுத்த பிரதமர் அலுவலகம்!

மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் விவசாயி சஞ்சய் சாதே. இவரால் 750 கிலோ வெங்காயத்தை விற்றதில், வெறும் 1,064 ரூபாய் மட்டுமே  வந்தது. மகாராஷ்டிராவில், வெங்காய விவசாயிகளின் நிலை இந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை உணர்த்த, பிரதம மந்திரியின் பேரிடர் நிவாரண நிதிக்கு (PMRF) அந்த 1,064 ரூபாயை அனுப்பி, தன் எதிர்ப்பைக் காட்ட விரும்பினார். அந்தப் பணமாவது விவசாயிகளுக்கு உதவப் பயன்படட்டும் என்று நினைத்துள்ள அவர், பணம் அனுப்பியதால் மேலும் சிரமத்துக்குத்தான் உள்ளாகியுள்ளார்.

விவசாயி

பணத்தைப் பெற்ற பிரதம மந்திரியின் அலுவலகம் (PMO),  நாங்கள், தற்போது நேரடிப் பணமாக எதையும் ஏற்றுக்கொள்வது இல்லை, ஆன்லைன் பேங்க்கிங் மூலம் அந்தப் பணத்தை அனுப்புமாறு கூறியுள்ளது. இதனால், மேலும் விரக்தி அடைந்துள்ளார் அவர். பணம் அனுப்புவதற்கு ஏற்கெனவே 54 ரூபாய் கூடுதலாகச் செலவழித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில்,  விளைவித்த 750 கிலோ வெங்காயத்தைத் தனது டிராக்ட்டரில் ஏற்றி மொத்த விலை சந்தைக்குச் சென்றுள்ள அவருக்கு, கிலோவுக்கு 1.41 ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது. இதற்கு, பல பொருளாதாரக் காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால், வெங்காய விவசாயிகள் தானமாகக் கொடுப்பதைப் போல தங்கள் விளைச்சலைக் கொடுத்துவருகின்றனர்.

வெங்காயம்

இப்படி பிரதமருக்கு தொகையை அனுப்புவதன் மூலம் எதிர்ப்புகள் வருமென்று எதிர்பார்த்த அவர், தனக்கு எந்த அரசியல் நோக்கும் இல்லை என்றும் விவசாயிகளின் பிரச்னைகளை எடுத்துச்சொல்லவே இப்படிச் செய்ததாகவும் தனது  டிராக்ட்டரில் போர்டு ஒன்றை வைத்திருக்கிறார். ஆனால், பிரதம மந்திரி அலுவலகத்தின் இந்தப் பதில், அவர் சிறிதும் எதிர்பார்க்காதது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க