வெளியிடப்பட்ட நேரம்: 19:03 (11/12/2018)

கடைசி தொடர்பு:07:05 (12/12/2018)

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்... யார் இவர்? #RBI

த்திய அரசுடன் ஏற்பட்ட மோதல் போக்கைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கியின் ஆளுநராக செயல்பட்டு வந்த உர்ஜித் பட்டேல் தன்னுடைய பதவியை நேற்று ராஜினாமா செய்தார். சொந்தக் காரணங்களால் பதவியிலிருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டிருந்தாலும், மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கால்தான் இந்நிலை ஏற்பட்டதாக எதிர்க்கட்சிகள் இதுகுறித்து விமர்சித்தன. இதைத் தொடர்ந்து புதிய கவர்னராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு

இந்த நிலையில், மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறையின் முன்னாள் செயலாளரான சக்திகாந்த தாஸ், ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் இருப்பார்.  ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இவர், 1980-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்-ஸாக தேர்வானவர். தமிழக கேடர் ஆபீஸராகப் பணியாற்றியவர். மத்திய அரசுப் பணிகளுக்கு 2008-ம் ஆண்டு சென்ற இவர், அதற்கு முன்பு தமிழக அரசின் வருவாய்த்துறை ஆணையர், தொழில்துறைச் செயலாளர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.

சக்தி காந்த தாஸ்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தபோது, அந்த முடிவில் மத்திய அரசுக்கு மூளையாக செயல்பட்டவர். பணமதிப்பிழப்பிற்குப் பின்பு, அரசின் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை ஊடகங்களிடம் முறையாக அறிவித்தவரும் இவரே!

நீங்க எப்படி பீல் பண்றீங்க