பணமதிப்பு நீக்கத்தைச் செயல்படுத்தியவர் ரிசர்வ் வங்கி ஆளுநரா? #RBI | Shakthikanth das the now governor of reserve bank is the head of demonitization committee

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (11/12/2018)

கடைசி தொடர்பு:07:08 (12/12/2018)

பணமதிப்பு நீக்கத்தைச் செயல்படுத்தியவர் ரிசர்வ் வங்கி ஆளுநரா? #RBI

ரிசர்வ் வங்கி கவர்னர்

ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் பட்டேல் நேற்று திடீர் என்று ராஜினாமா செய்த நிலையில் முன்னாள் ஆட்சிப்பணி அதிகாரியான சக்திகாந்த தாஸ் தற்போது அதன் ஆளுநரா நியமிக்கப்பட்டிருக்கிறார். அடுத்துவரும் மூன்று ஆண்டுகளுக்கு அவர் வங்கியின் ஆளுநராகப் பதவி வகிப்பார்.  இதற்கு முன்பு இந்திய அரசின் பொருளாதாரம் மற்றும் வருவாய் துறைச் செயலாளராக இருந்தவர் சக்திகாந்த தாஸ். கடந்த ஆகஸ்ட் 2016-ல் அவர் பொருளாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். அதை அடுத்து 2017 அவர் பணி ஓய்வு பெற இருந்த நிலையில், அதையடுத்து மூன்று மாதங்கள் பதவி நீட்டிப்பு கொடுக்கப்பட்டது. 

பணமதிப்பு

மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையையும் 8 நவம்பர் 2016 தொடங்கி அவரது தலைமையிலான குழுதான் செயல்படுத்தி வந்தது. பணமதிப்பிழப்பிற்குப் பின்பு, அரசின் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை ஊடகங்களிடம் முறையாக அறிவித்தவரும் இவரே. அப்போதைய வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையைத் தனது புத்தகத்தில் எதிர்த்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு அடுத்துதான் உர்ஜித் பட்டேல் நியமிக்கப்பட்டார். இதையடுத்து தற்போது பணமதிப்பு நீக்க நடவடிக்கைக் குழுத் தலைவராக இருந்த சக்திகாந்த தாஸை பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான அரசு ஆளுநராக நியமித்திருப்பது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க