பல்கலைக்கழகத்தின் சர்ச்சை கேள்வி - இனி வினாத்தாள்களுக்கு சென்சார் வேண்டுமா? | guru gobind singh universitys communal question comes to light after an advocates furious post

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (12/12/2018)

கடைசி தொடர்பு:14:50 (12/12/2018)

பல்கலைக்கழகத்தின் சர்ச்சை கேள்வி - இனி வினாத்தாள்களுக்கு சென்சார் வேண்டுமா?

ஒரு சமூகத்தையே மனிதமற்றவர்களாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்திரிக்கும் போக்கு தொடர்வதாகவும், சட்டக் கல்லூரி மாணவர்களின் மனதில் மதரீதியான வெறுப்பை விதைக்க நினைக்கிறதா கல்வி நிலையங்கள்?

உள்துறை அமைச்சகத் தகவலின்படி, பசுக்களை முன்வைத்து நடத்தப்படும் வெறுப்பு வன்முறைத் தகவல்களை, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சேகரிக்கவில்லை. வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை, படுகாயமடைந்தவர்கள், சிறு காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள், இடம், ஆண்டு, மாநிலம், பசுக்கள் தொடர்புடைய வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தபோது ஆட்சியிலிருந்த கட்சி ஆகிய பல தகவல்களையும் பட்டியலிட்டு வருகிறது இந்தியா ஸ்பெண்ட் நிறுவனம்.

பசுக் காவலர்கள்

இந்த நிறுவனத்தின் ஆய்வு முடிவுகளின்படி பசுப் பாதுகாவலர்கள் என்னும் பெயரில் செயல்படும் குழுக்களால் இந்தியா அதிகமாக இழந்திருப்பது இஸ்லாமியர்களின் உயிர்களைத்தான்.

 பசு கொலைகள்

பசு தொடர்பான மதவாதக் குற்றங்களில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ஒருவரே புலாந்ஷரில் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், சட்டக்கல்வி மாணவர்களின் தேர்வுத்தாளில் தரம் குறைந்த கேள்வி ஒன்றை வைத்திருக்கிறது, டெல்லி குரு கோபிந்த் சிங் பல்கலைக்கழகம். இளநிலை சட்டக்கல்லூரி மாணவர்களுக்கான ‘law of crimes' பாடத் தேர்வில் கேட்கப்பட்டிருக்கும் கேள்வி இது. ``சந்தைப்பகுதி ஒன்றில், ரோஹித், துஷார், மனவ் மற்றும் ராஹுல் என்னும் இந்துக்களின் முன்னிலையில் இஸ்லாமியர் அஹ்மத் ஒரு பசுவைக் கொல்கிறார். அஹ்மத் செய்தது குற்றமா?” என்று கேட்கப்பட்டிருக்கிறது அந்தக் கேள்வி.

`ஒரு சமூகத்தையே மனிதமற்றவர்களாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்திரிக்கும் போக்கு தொடர்வதாகவும், சட்டக் கல்லூரி மாணவர்களின் மனதில் மதரீதியான வெறுப்பை விதைக்க நினைக்கிறதா கல்வி நிலையங்கள்?' எனக் கேள்வியெழுப்பியிருக்கிறார் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிலால் அன்வர். குறிப்பிட்ட பல்கலைக்கழகம் இந்தக் கேள்வியை நீக்கி மன்னிப்புக் கேட்டுவிட்டாலும், கல்வியில் புகுத்தப்படும் இத்தகைய மதவாத தாக்குதல்களுக்கான எதிர் நடவடிக்கைகள் என்ன?

நீங்க எப்படி பீல் பண்றீங்க