வெளியிடப்பட்ட நேரம்: 14:35 (13/12/2018)

கடைசி தொடர்பு:14:35 (13/12/2018)

மத்தியப்பிரதேசத்தில் பா.ஜ.க முதுகில் குத்திய நோட்டா!

மிழகத்தில் பா.ஜ.க- வுக்கும் நோட்டாவுக்கும் நெருக்கம் அதிகம்.  கடைசியாக நடந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நோட்டாவுடன் போட்டிபோட்டு வாக்குகள் வாங்கியது பாரதிய ஜனதா கட்சி. முடிவில் பாரதிய ஜனதா கட்சி நோட்டாவுக்கும் குறைவாக ஓட்டுகள் வாங்கி தோல்வியை சந்தித்தது. இதனால், சமூக வலைதளங்களில் பாரதிய ஜனதா கட்சி கேலிக்குள்ளானது. தமிழகத்தில் பா.ஜ.க-வுடன் நெருக்கம் காட்டிய நோட்டா மத்தியப்பிரதேசத்தில் அந்தக் கட்சியின் முதுகில் குத்தியுள்ளது. அதாவது , மத்தியப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைப்பதைப் பறித்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக மத்தியப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்து வந்தது. நடந்து முடிந்த தேர்தலில் கடும் இழுபறிக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. 

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்

மத்தியப்பிரதேசத்தில் 230 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. பாரதிய ஜனதாவுக்கு 109 இடங்கள் கிடைத்துள்ளது. 230 தொகுதிகளில் 7 தொகுதிகளில் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 8 தொகுதிகளில் 1000-2000 வாக்குகள்தான் வித்தியாசம். 13 தொகுதிகளில் நோட்டாவுக்கு அதிகளவில் வாக்குகள் விழுந்துள்ளன. குவாலியர் தெற்கு தொகுதியில் 121 ஓட்டுகள் வித்தியாசத்தில் பா.ஜ.க தோற்றது. பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் தோற்ற வாக்குகள் வித்தியாசத்தைவிட அதிக ஓட்டுகள்  நோட்டாவுக்கு விழுந்துள்ளன.

நோட்டா

இதுபோல் ஸ்வஸாரா (350) ஜோரா (511) ஜபல்பூர் வடக்கு (578) பினா (632) கோலராஸ் (720) ராஜ்நகர் (732) தாமோ (798) பியாரோ( 826) ராஜ்பூர் (932 ) ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்ற வாக்குகள் வித்தியாசத்தைவிட நோட்டா அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. இதில், ஜோரா, பினா, கோலராஸ் தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. மற்ற தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க