குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25% குறைப்பு | RBI brings cheers to borrowers, cuts repo rate by 0.25%

வெளியிடப்பட்ட நேரம்: 13:27 (03/05/2013)

கடைசி தொடர்பு:16:19 (24/11/2017)

குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25% குறைப்பு

மும்பை: வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து ரிசர்வ் வங்கி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதன் மூலம், இதுவரை 7.50 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் இனி 7.25 சதவீதமாக குறைக்கப்படுகிறது.இந்த வட்டி விகிதக் குறைப்பால், வங்கிகளில் இருந்து பெறப்படும் வாகனம் மற்றும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறையும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

அதே சமயம் வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதத்தில் மாற்றமில்லை என்றும், அது 4% ஆகவே நீடிக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 

 

 


டிரெண்டிங் @ விகடன்