“2014 தேர்தலில் 11%; இந்தத் தேர்தலில் 9%” - ஐந்து மாநில தேர்தலில் பெண்களின் பங்கு இதுதான்! | Number of women MLAs down in recent five states election

வெளியிடப்பட்ட நேரம்: 21:37 (14/12/2018)

கடைசி தொடர்பு:21:37 (14/12/2018)

“2014 தேர்தலில் 11%; இந்தத் தேர்தலில் 9%” - ஐந்து மாநில தேர்தலில் பெண்களின் பங்கு இதுதான்!

“2014 தேர்தலில் 11%; இந்தத் தேர்தலில் 9%” - ஐந்து மாநில தேர்தலில் பெண்களின் பங்கு இதுதான்!

தேர்தல்

ந்து மாநிலங்களின் தேர்தல்தான் இப்போதைய ஹாட் டாக். இந்தத் தேர்தல்களில், வெற்றி வாகை சூடிய 678  நபர்களில் 62 பேர் மட்டுமே பெண்கள் என்று ஓர் ஆய்வு  தெரிவிக்கிறது. இந்த ஆய்வை, இந்தியத் தேர்தல் ஆணையமும் அசோசியேஷன் ஃபார் டெமாக்ரட்டிக் ரீஃபார்ம்ஸ் ( Association for Democratic Reforms)  என்ற அரசு சாரா நிறுவனமும் இணைந்து நடத்தியுள்ளது. 

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம்,  சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில், கிட்டத்தட்ட 93 மில்லியன் பெண்கள் வசிக்கின்றனர். இந்த  மாநிலங்களின் தேர்தல் முடிவில், வெற்றிபெற்றவர்களில் 9 சதவிகிதமே பெண்கள்!  இதுவே, கடந்த 2013-14 தேர்தலில்,  11 சதவிகிதமாக இருந்தது என்பது  குறிப்பிடத்தக்கது.  அதாவது, 678 வேட்பாளர்களில்  77 பெண் வேட்பாளர்கள் வெற்றி கண்டனர்.சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டுமே, பெண் எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கை விகிதம் சற்றே அதிகரித்துள்ளது.

கிட்டத்தட்ட  10 லட்சத்துக்கும் அதிகமான  மக்கள்தொகையில் 49% பெண்கள் இருக்கும் மிசோரம் மாநிலத்தில்,  இதுவரை ஒரு பெண் வேட்பாளர்கள்கூட தேர்தலில் போட்டியிட்டதில்லை என்று கூறுகிறது  இந்த ஆய்வு. 

தேர்தல்

“தேர்தலில் ஒட்டு போட வேண்டுமானால், பெண்கள் அதிக அளவில் ஈடுபடுகின்றனர். ஆனால், பெண்கள் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-க்களாகவும்,  எம்.பி-க்களாகவும் ஜெயிப்பதுதான் ஜனநாயகத்தின் உண்மையான அர்த்தம். யதார்த்தமாகப் பார்த்தால், பெண்கள் தலைமைப் பொறுப்பிலிருக்கும் பட்சத்தில்,  பெண்களின் பொருளாதார மற்றும் சமுதாயத் தேவைகளைப் புரிந்துகொண்டு, எளிதாக அவர்களுக்கு அத்தகைய வசதிகளைச் செய்துதர முடியும். பெரிய கட்சிகள் இதைப்  புரிந்துகொண்டு, பெண் வேட்பாளர்களைத் தேர்தலில் போட்டியிடச் செய்ய வேண்டும்”  என்று பென்னிசில்வேனியா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் ரித்திகா  குமார் தெரிவிக்கிறார்.  
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க