பிறந்த 2 மணி நேரத்தில் ஆதார் கார்டு பெற்ற பெண் குழந்தை! - குஜராத் பெற்றோர் பெருமிதம் | Baby Girl got All Her Official Documents within 2 Hours Of Birth

வெளியிடப்பட்ட நேரம்: 12:37 (15/12/2018)

கடைசி தொடர்பு:12:37 (15/12/2018)

பிறந்த 2 மணி நேரத்தில் ஆதார் கார்டு பெற்ற பெண் குழந்தை! - குஜராத் பெற்றோர் பெருமிதம்

இந்தியாவிலேயே பிறந்த அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஒரு பெண் குழந்தைக்கு ஆதார், ரேஷன், பிறப்புச் சான்றிதழ் போன்ற அனைத்து ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளன. 

பெண் குழந்தை

குஜராத்தைச் சேர்ந்த அங்கிட் நாகராணி மற்றும் பூமி நாகராணி தம்பதிக்கு கடந்த 12-ம் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தை பிறந்த அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவருக்கான அனைத்து அரசு ஆவணங்களையும் தயார் செய்து அந்தக் குழந்தைக்கு பரிசாக வழங்கியுள்ளார் அவரின் தந்தை. 

குழந்தை பிறப்பதற்கு முன்னரே அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அங்கிட் செய்து வைத்துள்ளார். பிறகு குழந்தை பிறந்தவுடன் அவருக்கு ரம்யா எனப் பெயரிட்டு உடனடியாக பிறப்புச் சான்றிதழ் வாங்கி அதன் மூலம் பிற ஆவணங்களான ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட் போன்ற அனைத்து அரசு ஆவணங்களையும் தயார் செய்துள்ளார். 

ஆதார் கார்டு

இது பற்றி பேசிய அங்கிட் நாகராணி, `` எங்களுக்குக் குழந்தை பிறந்த உடனேயே பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியாவில் சேர்க்க வேண்டும் என்பது எனது ஆசை. மேலும், இந்தியாவிலேயே மிக இளம் வயதில் அனைத்து ஆணவங்களையும் கொண்டவராக என் குழந்தை இருக்க வேண்டும் என்பது எனது பெரும் கனவு. அதனால் குழந்தை பிறக்கும் முன்பே அதிகாரிகளின் உதவியுடன் ஆவணங்களுக்கான முன் ஏற்பாடுகளைச் செய்ய தொடங்கினோம். பிறகு குழந்தை பிறந்தவுடன் அவருக்குப் பெயர் வைத்துப் பிறப்புச் சான்றிதழ் மூலம் மற்ற ஆணவங்களைத் தயாரித்தோம். இதன் மூலம் என் குழந்தை பெருமைப்படுவாள்” எனத் தெரிவித்துள்ளார்.