வெளியிடப்பட்ட நேரம்: 16:51 (17/12/2018)

கடைசி தொடர்பு:16:51 (17/12/2018)

`அவர்களிடத்திலும் அன்பு செலுத்தக் கற்றுக்கொள்வோம்!’ - இன்று சிவப்புக் குடை நாள்

உலக அளவில் அதிகமான தொந்தரவுக்கு உட்படுத்தப்படுவது பாலியல் தொழிலாளர்கள்தான். மேலும், அவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து பல்வேறு வன்முறைகளும் நடந்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் ஆண்களின் கொடூர தாக்குதலால் காயமடைந்து பலியான பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கைத் தாண்டுகிறது.

Violence Against Sex Workers

பாலியல் தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக அமெரிக்காவில் ஆண்டுதோறும் டிசம்பர் 17-ம் தேதியை பாலியல் தொழிலாளர்களுக்கெதிரான வன்கொடுமை எதிர்ப்பு தினமாகக் கடைப்பிடித்து வருகின்றனர். இந்நாளை முதன்முறையாக 2003-ம் ஆண்டில், டாக்டர் அன்னி ஸ்ப்ரிங்கிளும் (Dr. Annie Sprinkle,) The Sex Workers Outreach Project (USA) என்னும் அமைப்பினரும் பின்பற்றினார்கள். அன்று முதல் தற்போது உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஐரோப்பாவில் இதற்கென பல்வேறு அமைப்புகள் விழிப்பு உணர்வுகள் ஏற்படுத்தி வருகின்றன.

பாலியல் தொழிலாளர்கள்

இந்தியாவில் ஏறத்தாழ 2 மில்லியனுக்கும் அதிகமான பாலியல் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் 5,000 முதல் 7,000 வரை சிறுமிகள் இந்தியாவுக்குக் கொண்டுவரப்படுகிறார்கள்.

International Day to End Violence Against Sex Workersபாலியல் தொழிலாளர்களின் வன்கொடுமைக்கு எதிரான சின்னமாக சிவப்புக் குடை சின்னம் கடைப்பிடிக்கப்படுகிறது. இவர்களைப் பாதுகாக்க எவ்விதச் சட்டங்களும் கிடையாது. இவர்களால் பாலியல் வன்கொடுமை வழக்கைப் போடவோ, இழப்பாக நிதியைப் பெறவோ முடியாது. காவல் துறையினரும் நீதிபதிகளும் எப்போதும் இவர்களுக்கு எதிராகவே இருக்கிறார்கள். பல நேரங்களில், பாலியல் தொழிலாளர்கள் தங்களுக்கு எதிரான வன்முறை குறித்து புகார் தெரிவித்தால், அவர்கள் மீதே வழக்குப் பதியப்படுகிறது. அவர்களுக்கும் எல்லா மனித உணர்வுகளும் உள்ளன. நாம் தான் அவர்களை நம்மில் ஒருவராக ஏற்க மறுக்கிறோம். 

இனியாவது அவர்களிடத்திலும் அன்பு செலுத்தக் கற்றுக்கொள்வோம். அவர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தடுப்போம். அதற்காக இந்த சிவப்புக் குடை நாளில் ஓர் உறுதி மொழியை எடுத்துக் கொள்வோம்! 

சர்வதேச பாலியல் தொழிலாளர்களுக்கெதிரான வன்கொடுமை எதிர்ப்பு தினம் :  டிசம்பர் 17

நீங்க எப்படி பீல் பண்றீங்க